சமீப காலத்தில் குறு, சிறிய மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.,) கம்பெனிகளுக்கு கிடைத்த பெரிய வரம் என்னவென்றால் சிறிது தடை இல்லாத மின்சாரம். இது தவிர அவர்களுக்கு பிரச்னையாக இருப்பது நடைமுறை மூலதனம். அதாவது “வொர்கிங் கேபிடல்”. இது வங்கிகளால் வழங்கப்பட்டாலும், பல வங்கிகள் கடன் கொடுக்க முன்வருவதில்லை. காரணம் சிலர் சரியாக கட்டாதது. அதனால் வங்கி மேலாளர்களுக்கு ஏற்படும்பிரச்னைகள். அப்படியே கடன் கொடுக்க முன் வந்தாலும் சொத்து ஜாமீன் கேட்கப்பட்டதால் பலரால் தர இயலவில்லை.

ஆனால், 2016ம் வருடத்திற்கு பிறகு வந்த “ஸ்டார்ட் அப்” அலையில் பல புதிய என்.பி.எப்.சி., (நான் பாங்கிங் பைனான்ஸ்) கம்பெனிகள் வந்தன. இதில் பல கம்பெனிகளுடைய கவனமே இந்த குறு, சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளாக இருந்தன.

இதில் முக்கியமான கம்பெனிகளில் ஒன்று கினாரா கேபிடல் (Kinara Capital). பெங்களூரை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த கம்பெனி சொத்து ஜாமீன் இல்லாத குறு, சிறிய மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.ஈ.,) கம்பெனிகளுக்கு கடன்கள் கொடுத்து வருகிறது.

5 முதல் 7 நாட்களில் கடன் கொடுப்பதைப் பற்றிய முடிவுகளை எடுத்து விடுகிறது (அதாவது கொடுக்க முடியுமா, முடியாதா என்ற முடிவுகளை). கடன் வாங்குபவரின் இடத்திற்கே சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவுகிறது. இவர்களுக்கு 25,000 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

இதுவரை சுமார் 1,000 கோடி ரூபாய் வரை கடன் கொடுத்துள்ளது. குறைந்தபட்ச கடன் ரூபாய் 2,00,000. அதிகபட்ச கடன், ரூபாய் 25,00,000. வங்கிகளின் வட்டி விகிதத்தை வைத்து பார்க்கும்போது வட்டி சிறிது அதிகமாக இருக்கிறது. ஆனால் உங்கள் தேவைக்கும், நேரத்திற்கு கடன் கிடைக்கும் என்ற கியாரண்டி இருக்கும் என்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு வாங்கலாம்.

தமிழ்நாட்டிலும் பல இடங்களில் கிளைகள் வைத்துள்ளது. மேலும் விபரங்களுக்கு இவர்களுடைய இணையதளத்தை பார்க்கவும் www.kinaracapital.com.

Spread the lovely business news