வீட்டிலேயே பலர் நளபாகத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். என் நண்பனின் மனைவி வெங்காய சாம்பார், ரசம் வைத்தால் ஊருக்கே மணக்கும். அது போல அவர்கள் செய்யும் லட்டு மிகவும் சுவையாக இருக்கும். எப்போது அவர் வீட்டிற்கு சென்றாலும் இது தான் எனக்கு தேவையான மெனு. அப்படி ஒரு சுவை. அதுவும் அவர்கள் ஈயச்சட்டியில் வைக்கும் வைக்கும் ரசத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை. இப்படி பலரிடம் பல கதைகள் இருக்கும். இப்படி நளபாகத்தில் சிறந்தவர்களை இணைத்து அவர்களுக்கு ஒரு வருமானத்திற்கு ஏற்பாடு செய்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை உண்மையானதில் உதித்ததுதான் மிர்ச்சி.காம். (mirchi.com).

பலர் வத்தல், வடாம், ஊறுகாய், உணவு வகைகள், இனிப்புகள் என்று தயாரித்து விற்றாலும் அது நண்பர்கள், உறவினர்கள் என்ற குறுகிய வட்டத்தையே சுற்றி வருகிறது. பெரிய அளவில் செல்வதில்லை. இதையெல்லாம் போக்கும் விதமாக இந்த இணையதளம் இருக்கும். நீங்கள் தயாரிக்கும் பொருட்களை இங்கு காட்சிப்படுத்தலாம். ஆன்லைன் மூலமாக விற்பனை நடைபெறுகிறது. 300 பேர் இதுவரை சேர்ந்துள்ளார்கள். 3,000 பொருட்கள் இதுவரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சமையல் கலையில் சிறந்த 1,000 பேர் வரை இதில் இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த இனிப்பு, காரம் வகைகள் சங்கமமாகும் இடமாகும் இது. இணையதளத்தின் பெயர் www.mirchi.com