பெரிய ஜாம்பவான்களான ரிலையன்ஸ் ரீடெய்ல், பிக் பஜார், டி-மார்ட், அமேசான், பிளிப்கார்ட் போன்ற கம்பெனிகள் வந்ததிலிருந்து சிறிய கடைகள் அவர்களிடம் போட்டி போட வேண்டிய ஒரு சூழ்நிலை.

இந்தியாவில் 18 மில்லியன் (அதாவது 1கோடியே 80 லட்சம்) ரீடெயல் கடைகள் இருக்கின்றது. இவற்றின்  மூலம் நடைபெறும் மொத்த விற்பனை 600 பில்லியன் டாலர்களை (அதாவது 42,00,000 கோடி ரூபாய்களை) தாண்டுகிறது.

இந்த ரீடெய்ல் கடைகளுக்கு உதவும் விதமாக பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள் வந்துள்ளன.

இதனால் ரீடெய்ல் கடைகளுக்கு என்ன பலன்? சரக்குகள் மொத்த விலையில்  கிடைக்க உதவுகிறது. நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து சப்ளை செய்யப்படுகிறது. அதிக ஸ்டாக் வைக்க வேண்டாம். உங்களுக்கு தேவையான ஸ்டாக் ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் கிடைக்க வழி செய்கிறது.

உங்களது வருட விற்பனையை பொறுத்து உங்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் பெற உதவுகிறது, உங்களுடைய கடையின் இன்சூரன்ஸ் போன்றவைகளுக்கு உங்களுக்கு அட்வைஸ் செய்கிறது.

ஆக  உங்களுடைய வியாபாரம் பெரிய கடைகளுடன் போட்டி போட உதவுகிறது.

இந்த வகை ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் முக்கியமானவை என்று பார்த்தால் –  Express Stores, Behtar Stores, Gully Network, Good Box, Shop Kirana, NIFLR and Jumbo Tail ஆகியவை ஆகும்.

Spread the lovely business news