பள்ளி, கல்லூரிகளுக்கு கடன்கள் அத்தியாவசிய தேவை என்ற பட்சத்திலும்  அவர்களைச் சரியாக புரிந்து கொண்டு கடன் கொடுப்பவர்கள் அதிகம் இல்லை. வங்கியென்றால் அது நிச்சயமாக ஒரு நீண்ட புராசஸ்க்கு  போய் விடும். தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்காது.

இதை மனதில் வைத்துதான் என்.பி.எப்.சி., என்ற வங்கி சாராத நிதி நிறுவனம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் நகரைத் தலைமையிடமாகக்  கொண்டுள்ள இந்த நிறுவனம்  உலகத்திலேயே எஜுகேஷன் செக்டாருக்கு பண்டிங் செய்யும் தனிப்பட நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

இவர்களின் எண்ணம் என்னவென்றால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். அப்படி செய்ய நினைக்கும் நல்ல கல்வி நிறுவனங்களுக்கு பண்டிங் ஒரு தடையாக இருக்க கூடாது என்பது இவர்களது எண்ணம். அப்படி நிதி தேவைப்படும்  நிறுவனங்கள் வெளியாரிடம் அதிக வட்டிக்கு கடன்கள் வாங்கி தங்கள் சுமையை அதிகப்படுத்தி கொண்டிருக்கின்றன. இவர்களின் சுமையை குறைப்பது ஒரு முக்கிய வேலை எனக் கருதி இந்த நிறுவனம் செயல்படுக்றது. 

அடமானம் இல்லாத கடன், அடமானத்துடன் கடன் என்ற இருவகையில் செயல்படுகிறார்கள்.

என்னென்ன கடன்கள் கொடுக்கிறார்கள்?

ஸ்கூல், காலேஜுக்கான கடன்கள், கோச்சிங் சென்டருக்கான கடன்கள், ப்ளே ஸ்கூல்களுக்கான கடன்கள், ஆசிரியர்களுக்கான கடன்கள், பஸ் லோன், மாணவர்களுக்கு கல்விக் கடன்.

கட்டிடங்கள் கட்ட, லாப் வசதிகள் ஏற்படுத்தி தர, வாகனங்கள் வாங்குவதற்கு, தரமான ஆசிரியர்களை கொண்டு வர போன்றவைகளுக்கு இவர்கள் லோன் கொடுக்கிறார்கள். இது தவிர கோச்சிங் சென்டர், ப்ளே ஸ்கூல் ஆகியவைகளுக்கும் கிடைக்கிறது.

ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் வங்கியல்ல, தனியார் நிதி நிறுவனம். ஆதலால் வட்டி சிறிது அதிகமாக இருக்கலாம். ஆனால் வெளியாளிடமிருந்து அவசரத்திற்கு கடன்கள் வாங்குவதை விட இதில் வட்டி  குறைவாக இருக்கும்.

இதுவரை 4500 பள்ளி, கல்லூரிகளுக்கு உதவியிருக்கிறார்கள்.  இவற்றில் 77 சதவீதம் வருடத்திற்கு ரூபாய் 1200க்கும் குறைவாக கல்விக் கட்டணங்கள் வசூலிக்கும்  கல்வி நிறுவனங்கள், கிராமப் புறங்களுக்கு 13 சதவீதம் உதவியிருக்கிறார்கள்.  40 லட்சம் கல்வி கற்பவர்களுக்கு இந்த உதவி பயன்பெற்றிருக்கிறது.  இந்தியாவில் 15 மாநிலங்களில் 150 மாவட்டங்களை இவர்கள் கடன்கள் கொடுக்க எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்களுக்கும் கடன்கள் கொடுக்கிறார்கள்.

இவர்களை தொடர்பு கொள்ள இணையதளம் www.ifsc.inஈமெயில் contact@ifsc.in

Spread the lovely business news