சிறிய வயதில் எத்தனை பேர் பள்ளியில் தறி வாத்தியார் இருந்திருப்பார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். சிதம்பரத்தில் நான் படித்த இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் தறி வகுப்பும் உண்டு, தறி சொல்லித்தர தரமான வாத்தியார் மாணிக்கம் அவர்களும் இருந்தார்கள். கற்றுக் கொள்ளத்தான் ஆர்வம் எங்களில் பலரிடம் இல்லை. காரணம் உடம்பில் தறி அடிக்கும் அளவிற்கு தெம்பு இல்லாததுதான்.  தெம்பு இருந்தவர்கள் கற்றுக் கொண்டார்கள்.

இன்றைய தினத்தில் துணிகள் நெய்யப்படும் வேகத்தைப் பார்த்தால் பிரமித்து விடுவோம். இந்த துணிகள் இந்த அளவு சிறப்பாக, வேகமாக நெய்ய அடிப்படை கைத்தறிகள்தான். அவை வளர்ந்து வந்த விதம் தெரிந்து கொள்வது மிக முக்கியம். திருப்பூர் கைத்தறியை மறக்க முடியுமா? கொண்டாட வேண்டும்.

நூலை துணியாக்கும் வித்தையை செய்யும் தறியின் கதை நம் அனைவருக்கும் தெரிய வேண்டும். சரித்திரங்கள் மறையக் கூடாது, மறக்கப்படவும்  கூடாது.

இன்றைய தினமும் கையினால் நெய்யப்பட்ட கைத்தறி துணிகளுக்கு ஒரு மவுஸ் இருக்கிறது.

ஆதாம், ஏவாள் காலத்திற்கு பிறகு மனிதன் இலை, தழைகளை ஆடையாக அணிய ஆரம்பித்து, பின்னர் விலங்குகளின் தோல்களை ஆடையாக அணிய ஆரம்பித்தான். அதன் பின்னர் தான் துணிகள் புழக்கத்திற்கு வந்தன. துணிகள் புழக்கத்திற்கு வந்தது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதன் முதலில் துணிகள் கைகளால் நெய்யப்பட்டன. அதாவது நூல் இழைகளில் முடிச்சுகள் போடப்பட்டு துணிகள் கைகளினால் நெய்யப்பட்டன. இது தான் முதல் டெக்ஸ்டைல்ஸ் டெக்னிக் என கருதலாம். பின்னர் படிப்படியாக இத்துறை வளர்ச்சி பெற்றது எப்படி என்று பார்ப்போம்.

கற்காலத்தின் பின் பகுதியில்  முதலில் செர்பியா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஸ்காண்டிநேவியா ஆகிய நாடுகளில்தான் துணிகள் நெய்வது தொடங்கியது.

முதலில் வார்ப் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது. பின்னர் அது பேக் ஸ்ட்ராப் டெக்னாலஜி உபயோகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஹேடில் லூம் பயன்படுத்தப்பட்டது.

பின்னர் ப்ளையிங் ஷட்டில் லூம் பயன்படுத்தப்பட்டது. இது 1733ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சுமார் 200 வருடங்களுக்கு இது தான் துணி நெய்வதில் கோலோச்சியது.

இதன் பின்னர் தான் துணிகள் நெய்வது இயந்திரமாக்கப்பட்டது.

1786 ல் ஜகுவார்டு லூம் வந்தது. இது பல புதிய டிசைன்களில் துணிகள் நெய்ய ஏதுவாக இருந்தது.

பின்னர் புளூயிட் ஜெட் லூம் வந்தது. இது இன்னும் துணி நெய்யும் டெக்னாலஜியில் புதிய பாணிகளை கொண்டு வந்தது. அதன் பின்னர் துணி நெய்வதில் இன்னும் பல புதிய பரிமாணங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

Spread the lovely business news