அந்தக் காலத்தில்  தரையில் படுத்து உறங்கினோம், தரையில் உட்கார்ந்து சாப்பிட்டோம், தரையில் உட்கார்ந்து பள்ளிகளில் பாடம் படித்தோம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதனால் உடல் நலமாக இருந்தது. மூட்டுகள் பலமாக இருந்தன. டாக்டர்களிடம் அதிகம் சென்றதில்லை. அதனால் பர்சும் கனமாகவே  இருந்தது. சேமிப்பும், உடல் நலமும் கூடியது.   தைக்கால், பத்தமடை என்ற ஊர்கள் பாய் விற்பனைக்கு பலம் சேர்த்தன. காலங்கள் மாறின, வருடங்கள் ஓடின. பாய்கள் சுருட்டி பரணில் வைக்கப்பட்டன. அப்போதெல்லாம் கட்டில், பீரோ செய்ய வேண்டுமென்றாலும் கூட நம் வீட்டுக்கென ஒரு ஆசாரி இருப்பார். அவர் நம் வீட்டிற்கே வந்து பல நாட்கள் தங்கி மரங்களை இழைத்து, இழைத்து செய்து தருவார். அவையும் பல காலம் உழைக்கும்.

முன்பெல்லாம் சிலரின் வீடுகளில் மட்டுமே இருந்த கட்டில், பீரோ, மெத்தைகள், வார்ட் ரோப், டேபிள், சேர் ஆகியவை, இன்று இல்லாத வீடே இல்லை என்ற அளவிற்கு வந்து விட்டது. பல ஆர்கனைஸ்டு பர்னீச்சர் கம்பெனிகள் பின்னர் வந்தன. இவற்றில் பல காணாமலும் போயின.

இந்த துறையின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 16 பில்லியன் டாலர் (112,000 கோடி ரூபாய்கள்) ஆகும். இன்னும் 5 வருடத்தில் இது 25 பில்லியன் டாலர் (175,000 கோடி ரூபாய்) மதிப்புள்ளதாக அதிகரிக்க உள்ளது. இந்தத் துறையில் அன் ஆர்கனைஸ்ட் (UNORGANISED) லோக்கல்  கம்பெனிகள் தாம் பெரிய இடத்தை பிடித்துள்ளன. அதாவது தற்போது சுமார் 95 சதவீதம் வரை இருக்கின்றன. இது இன்னும் 5 வருடத்தில் 90 சதவீதமாக குறையும்.

இதிலிருந்து இந்த துறையில் ஒரு பெரிய பிசினஸ் ஆப்பர்சூனிட்டி இருக்கிறது என்று உங்களுக்கு புரியவில்லையா? ஆனால் இன்று பல பெரிய கம்பெனிகளுக்கு புரிந்திருக்கிறது.

ஆமாம், தடதடவென பல பெரிய கம்பெனிகள் ரெடிமேட் பர்னீச்சர் விற்பனையில்  களம் இறங்கியுள்ளன.  இந்த நிறுவனங்கள் விலை உயர்ந்த  பர்மா தேக்கு, ரோஸ் வுட் ஆகியவற்றில் எல்லாம் பர்னீச்சர் செய்வதில்லை. ப்ளைவுட் அல்லது விலை குறைந்த ரப்பர் வுட் ஆகியவற்றிலிருந்து பர்னீச்சர்களை தயாரித்து குறைந்த விலையில் அளிக்கின்றன.

இப்போது  பர்னீச்சர் வாங்குபவர்களும், இளைஞர்களும் அவை ஐந்து வருடம் உழைத்தால் போதும் என்ற எண்ணத்தில்தான் வாங்குகின்றனர்.  காரணம் புதிது, புதிதாக மாற்றிக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி.

இந்த மார்க்கெட் மதிப்பு தெரிந்துதான் உலகத்தின் பெரிய பர்னீச்சர் ரீடெய்லரான ஐக்கியா (IKEA) இந்தியாவில் களம் இறங்கியிருக்கிறது. ஹைதராபாத்தில் ஒரு மிகப்பெரிய ஷோ ரூமை 400,000 சதுர அடியில்  திறந்துள்ளது.

பிளிப்கார்ட், தங்களுக்கென பர்பெக்ட் ஹோம் ஸ்டூடியோ (PERFECT HOME STUDIO) என்ற கம்பெனியை ஆரம்பித்திருக்கிறது. பிடிலைட் (பெவிகால் தயாரிக்கும் கம்பெனி) பெப்பர் ப்ரை என்ற பர்னீச்சர் விற்பனை கம்பெனியில் முதலீடு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்னும் களத்தில் இறங்கவில்லை.

Read More