திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் உலகத் தரம் வாய்ந்த குளிர் சாதன கிடங்கு NSR ஃபார்ம் ஃபிரெஷ் (NSR Farm Fresh). தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த குளிர்பதன கிடங்கு நிறுவனர் திரு. N.S.ரத்தினம் சந்திரசேகரன் அவர்கள் தனது மகன்களோடு சேர்ந்து சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார்.    இது தென்னிந்தியாவின் மிகப் பெரிய காய்கறி மொத்த வியாபார சந்தைக்கு பெயர்போன ஒட்டன்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால்,  கம்பம், தேனி, கொடைக்கானல், கரூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் எளிதில் சென்று அணுக முடிகிறது.  சுற்றுவட்டார விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது. 

Read More