பேட்டி, கட்டுரையாளர் :  அ. ஹுமாயூன்,  சிதம்பரம்.

பொதுவாக பல ஊர்கள்ல ஒரு லாபநோக்கமற்ற கூட்டம் நடத்த இடம் கிடைப்பது மிகவும்  சிரமமாக இருக்கும்.  அதுவும் தொடக்கநிலை தொழில் முனைவோர் சந்திப்பு பெரும்பாலும் ஒரு ஹோட்டலிலோ அல்லது ஒரு பொது இடமான காபி ஷாப் மாதிரி இடங்களிலோ  நடக்கும்போது அதிக மக்கள் கலந்துக்க யோசிக்கிறாங்க. மதுரைக்கும் இது விதிவிலக்கல்ல.

கம்யூனிட்டி என்பது  கூட்டுறவு அமைப்பாக ( மதுரை ஸ்டார்ட் அப்ஸ் (Startups)  கம்யூனிட்டி போல) மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் நடத்தி அதுல ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுவது தான்.  இது போல பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.  சில மாதங்களில் சந்திப்பு நடத்த இடம் கிடைப்பது பெரும் சிரமம் இருந்துள்ளது.  இதனால்  நமக்குன்னு ஒரு இடம் வேண்டும் என்று கோரிக்கை முறையில் உரிய இடம் ரெடி பண்ணவும், அந்த இடம் பெண்களும் தயக்கமின்றி வர கம்யூனிட்டி மெம்பர்களில் ஒருவரான  லட்சுமி அவர் கணவரின் ஒரு தொழில்முனைவு முயற்சிக்காக சென்னையிலிருந்து, மதுரைக்கு இடம் பெயர்ந்தபோது பெங்களூர் மற்றும் சென்னையில் இருக்கிற மாதிரி மதுரையில் ஒரு ஏற்பாடு இல்லைன்னு ஏற்பட்ட ஏக்கத்தின் வடிகால் தான் “ஜெயவில்லா”. தன்னோட வீட்டு் மாடியில் இருந்த உபரியான இடங்களை  ஒரு பகிர் அலுவலகம் அல்லது இணை உழைப்பு இடம் (Co work space) ஆக மாற்றினார். 

இங்கு உங்களுக்கு அதிவேக இணையமும் (Hi-speed Internet),  தொழில் முனைவோர் தொடர்பும்  இருக்கும். அதுபோக தொடர்ச்சியாக சனி, ஞாயிறுகளில் சந்திப்பு நடக்கிறதனால  நிறைய வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.  புதுசா ஒரு ஐடியாவை வச்சு தொழில் தொடங்க நினைத்திருப்பவர்களுக்கும், ப்ரீலான்ஸ்சர்கள் / கன்சல்டன்ட்கள், அடிக்கடி ட்ராவல் பண்றவங்க இவங்க எல்லாம் சந்தித்து பேசுவதற்கு மேலும் தற்காலிகமாக வேலை பாக்குறதுக்கு ஒரு பகிரப்பட்ட இடம்தான் இந்த “ஜெயவில்லா” என்று பெயர் பெற்றிருக்கும் www.625001.in என்ற ஸ்டார்ட் அப்.

இது மதுரையில் ஒரு புதிய முயற்சி.  இது நிறைய ஆதரவாளர்களின் பங்கேற்பால் தொடர்ச்சியாக கடந்த 5-6 வருடமாக மதுரையில் மாதாந்திர தொழில்முனைவோர் கூட்டத்தை நடத்திட்டு இருக்காங்க. சிறப்பு அழைப்பாளர்கள் ஏற்பாடு செஞ்சு மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை பெரியளவிலான நிகழ்வுகளை நடத்திட்டு இருக்காங்க.

கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார்ட்-அப் சுய தொழில் மோகம் இந்தியாவில் பரவலாக பரவிக்கொண்டு வருகிறது. வேலைத் தேடி அலுவலகம் ஏறி இறங்கிய காலம் மாறி சுய தொழில் செய்ய வாய்ப்புகளை வலைப்போட்டு பிடிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். ஸ்டார்ட்-அப்கள் அதிகரிப்பதையே தனக்கு சாதகமாய் பயன்படுத்தி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இடமளிக்க ஆரம்பிக்கப்பட்டது தான் www.625001.in.

பிரத்தியோகமாக ஸ்டார்ட்-அப்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது இந்த  நிறுவனம். இந்நிறுவனம் மூலம் தொழில் தொடங்கும் சிறு தொழில் முனைவோர்கள் குறைந்த முன்பணம் செலுத்தி குறைந்த வாடகை கொடுத்து நிரந்தரமான  அலுவலகம் அமைக்காமல் பயன்பாட்டிற்கு ஏற்ற தொகையை செலுத்தி பயன்படுத்தலாம். ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது ஏன் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் சந்திப்புகளை நடத்த / வேலைகளை செய்ய –  WiFi மற்றும் மற்ற வசதிகளுடன் இடவசதியை அமைத்திருக்கிறது இந்த நிறுவனம். 

ப்ரொஜக்டர் வசதியுடன் கான்ஃபரன்ஸ் ஹால் எதிர்பார்க்கும் ஸ்டார்ட்-அப்களுக்கு அதையும் குறைந்தக் கட்டணத்தில் அளிக்கின்றனர்.

ஸ்டார்ட்-அப்கள் வளர்ந்து வரும் நிலையில் தனது தொழிலுக்கான வளர்ச்சியை தன்னால் பார்க்க முடிகிறது என்றும் மேலும் ரியல் எஸ்டேட் போல் மாறாமல், அதிக லாபம் எதிர்பார்க்காமல் சிறு தொழில் நிறுவனர்கள் அதிக பயனடையும் நோக்கிலே தனது நிறுவனம் செயல்படும் என நம்பிக்கை தொனிக்க ஜெயவில்லா நிறுவனர் தெரிவிக்கிறார்.

Read More