2001ஆம் ஆண்டு அறிக்கை படி இந்திய மக்கள் தொகையில் 2.1 சதவீத மாற்றுத் திறனாளிகள் இருந்திருக்கிறார்கள். 2011 ஆண்டு அறிக்கைப்படி இது 2.21 சதவீதமாக இருக்கிறது. இதில் ஆண்கள் 55.6 சதவீதமும் பெண்கள் 44.4% இருக்கிறார்கள். இவர்களில் கிராமப்புறங்களில் 66 சதவீதமும், நகர்ப்புறங்களில் 33 சதவீதமும் இருக்கிறார்கள்.

இவர்களின் வாழ்வாதாரம் உயருவது மிகவும் முக்கியம். இதற்கென இந்தியாவில் பல லாப நோக்கில்லா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரையும் இணைக்கும் விதமாக, மாற்றுத் திறனாளிகள் உற்பத்தி செய்யும், தயாரிக்கும் பொருட்களை அனைவரையும் இணைத்து ஒரு இணையதளம் மூலம் இவர்கள் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கைப்பை, மணிபர்சுகள், விளையாட்டு சாமான்கள், ஆடைகள், ஸ்டேஷனரி, வீட்டு அலங்கார பொருட்கள், புத்தகங்கள் என்று பலதரப்பட்ட பொருட்களையும் இந்த இணையதளம் மூலம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

யாராவது மாற்றுத்திறனாளிகளுக்கு கண்களை தானமாக கொடுக்க முன்வந்தால் அவர்களுக்கென ஒரு பகுதியைத் தனியே ஏற்படுத்தி இருக்கிறாரக்ள். இன்றைய தினத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள், தீபாவளி, புது வருடம் போன்ற தினங்களுக்கு பலவிதமான பரிசு பொருட்களை தங்களுடைய வாடிக்கையாளருக்கு அளிக்கிறார்கள் அந்த பரிசு பொருட்களை மொத்தமாக இவர்களிடமிருந்து வாங்குவதற்கான தனியே ஒரு பகுதி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த அமைப்பு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் திறமைகள் உயர பயிற்சி மற்றும் கருத்தரங்கு பல இடங்களில் நடத்தப்படுகின்றன.

2018 ஆம் வருடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளை சிறந்த அமைப்பு என தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

www.giftabled.com

www.giftabled.org