நான், “வெஜிடேரியன்” என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனால் தற்சமயம் பலர் ஹோட்டல்களில் மற்ற இடங்களில் நான் “வேகன்” என்று கூறுவதை கேட்கிறோம். வெஜிடேரியனுக்கும், வேகனுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், வெஜிடேரியன் எந்தவிதமான அசைவமும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் வேகன் அதற்கு மேலே ஒரு படி கூடுதல், அசைவம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல, பிராணிகள் மூலம் உருவாகும் எந்தப் பொருளையும் சாப்பிட மாட்டார்கள். உதாரணம், பால், தயிர், முட்டை போன்றவை. 

இப்படி வேகமாக மாறும் உலகத்தில் வேகன் என்ற வகையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் மார்க்கெட்டில் அதிக மவுஸ் இருக்கிறது. 16வது நூற்றாண்டிலேயே நாம் இயற்கையான ஷாம்பூ உபயோகிக்க கற்றுக் கொண்டிருக்கிறோம். அதாவது  100 அல்லது 200 வருடங்களுக்கு முன்பே, ஏன் அதற்கு முன்பு தமிழ்நாட்டில் சீகக்காயை ஷாம்பூவாக உபயோகித்து வந்திருக்கிறார்கள். அது போல நெல்லிக்காயையும் உபயோகித்து வந்திருக்கிறார்கள். அது பின்னர் மாறி கெமிக்கல் கலந்த  ஷாம்பு வர ஆரம்பித்தது. பின்னர் காலங்கள் மாறி தற்போது சீகக்காய், சின்ன வெங்காயம், ஆலோ வேரா என்று ஷாம்பூக்கள், அழகு சாதனப் பொருட்கள் வர ஆரம்பித்து விட்டன. இதிலிருந்து என்ன தெரிகிறது? காலங்கள் மாறினாலும், நம் முன்னோர்கள் செய்து வந்தவை இன்னும் சிறப்பாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக யோகா, ஆயுர்வேதம், சித்தா, இயற்கை வைத்தியம் போன்றவை. இவற்றில்  பலரும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். 

இது சம்பந்தமாக பல ஸ்டார்ட் அப்கள் வர ஆரம்பித்து இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஒரு ஸ்டார்ட் அப் டெல்லியை சேர்ந்த “அராட்டா” என்ற பிராண்டில் இயற்கை அழகு சாதனப் பொருட்களை கொண்டு வந்திருக்கிற இந்த கம்பெனி இது வரை 30000 பொருட்களை ஆன்லைன் மூலம் விற்று இருக்கிறது. இந்த கம்பெனியில் இது வரை 5,00,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் 3.5 கோடி ரூபாய்) மற்றவர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

வாங்கிய கஸ்டமர்களில் 30 சதவீதம் பேர் திரும்ப வாங்குகிறார்கள். வாங்குபவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள், 30 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் 20 கடைகள் வைத்துள்ளார்கள், அதன் மூலமும் விற்கிறார்கள். வாங்குபவர்களில் 80 சதவீதம் பேர் 30 முதல் 35 வயதுக்குள் இருப்பவர்கள்.

உலகமே ஆர்கானிக், இயற்கை என்று மாறிக்கொண்டிருக்கிறது. நீங்களும் ஏன் மாறக்கூடாது.இவர்களின் இணையதளம் www.arata.in

Spread the lovely business news