இந்திய விவசாய விளைப் பொருட்களில் உள்ள ஒரு பிரச்னை  ஒன்று விளைந்து கொடுப்பது  அல்லது விளையாமல் கொடுப்பது அல்லது விளைந்த  பொருட்களை பதுக்கி வைத்து விலை கூடுவதற்கு வழி வகை செய்வது.  இதை தடுப்பதற்கு விவசாயிகள் தங்களின் விளைந்த பொருட்களை பத்திரமாக கிடங்குகளில் சேகரித்து வைப்பதற்கும் மற்றும்  அதற்கான  பணவசதிகளும் உண்டாக்கி கொடுப்பது போன்றவைகளை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறது சோகன் லால் கமாடிட்டி மேனேஜ்மெண்ட் கம்பெனி. 

இவர்கள் இந்தியாவில் பல இடங்களில் 4213 கிடங்கு வசதிகளும், 19 குளிரூட்டப்பட்ட கிடங்கு வசதிகளும் ஏற்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விவசாயிகள் இது போன்ற கிடங்கு வசதிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட  கிடங்கு வசதிகளை உபயோகப் படுத்திக் கொள்வதன் மூலம் தாங்கள் சேகரித்து வைத்துள்ள பொருட்களின் மீது கடன் வசதிகளைப் பெறவும் மேலும் அந்த  விளைப் பொருட்களை நல்ல விலைக்கு விற்று பணமாக்கவும்  முடியும்.

Spread the lovely business news