ஐடியாக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் புதுமையான சிந்தனைகளை, வணிக வடிவமாக்க இந்தியாவில் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவர்களுக்கான ஒரு ஸ்டார்ட்-அப் ஐடியாக்கள் போட்டியை கென் 42 (ken 42) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.  ஃபிக்கி (FICCI) உடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது.

இந்த போட்டியின் நோக்கம் என்னவென்றால் கல்லூரி மாணவர்களின் ஐடியாவை இந்தியா மற்றும் உலக அளவில் உள்ள சப்ஜெக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்களுடன் கலந்து ஆலோசிக்க வைப்பது, இந்தியா மற்றும் உலகளவில் மெண்டர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு தருவது, பின்னர் அந்த  ஐடியாக்களை வணிக வடிவமாக்க உதவுவது தான் இந்த போட்டியின் நோக்கம். 

முதல் 3 இடங்களுக்குள் வரும் சிறந்த ஐடியாக்களுக்கு அவருடைய கம்பெனியை தொடங்கி நடத்துவதற்காக  2 கோடி ரூபாய் வரையிலான பண்டிங் கிடைக்கும்.

இந்தியாவின் மிகச்சிறந்த வல்லுனர்கள் இந்த போட்டியின் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்ள கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி ஆகும்.  

மாணவர்களாகிய நீங்கள் எல்லோரும் ஒரு கனவை சுமந்து கொண்டிருப்பீர்கள்.  பலருக்கு அது வணிக கனவாக இருக்கும்,  உங்களின் இந்த வணிக கனவு நனவாக அதாவது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டும் அந்த நிறுவனத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற கனவுகள் மெய்ப்பட https://startnxt.ken42.com/ என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளவும்.

Spread the lovely business news