கணவன் வேலைக்கு சென்ற பிறகு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு  பொழுதை எப்படி பயனுள்ளதாக போக்குவது என்று தெரியாமல் விழித்தார். கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த சபீரா முகமது. வீட்டின் மாடியில் ஒரு தோட்டம் அமைக்க ஆரம்பித்தார். அங்கு பூத்த பூக்கள், விளைந்த காய்கறிகளை பார்த்த மலர்ச்சியின் விளைவு தான் இன்று ஒரு ஏக்கர் அளவில் நர்சரி வைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. 1998-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நர்சரிக்கு முகநூல் பக்கம், வாட்ஸப் குழுமம் ஆகியவை இருக்கின்றன, 5000க்கும் மேற்பட்ட தொடர்பவர்கள் இருக்கிறர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நர்சரியிலிருந்து செடிகள் விற்பதன் மூலம் மாதம் ரூபாய் 3,00,000 சம்பாதிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தோட்டக்கலை சிறப்பாக மக்களிடம் எடுத்துச் சென்றதற்காக கேரளா அரசாங்கத்தின் “உதயானா ஸ்ரிஸ்தா புரஸ்கர்” விருதைப் பெற்றிருக்கிறார். இன்று 500க்கும் மேற்பட்ட மலர் செடிகளை வளர்த்து வருகிறார். இவருடைய நர்சரியின் பெயர் Pearl Orchids.

Spread the lovely business news