சுகமான உறக்கத்திற்கு நல்ல படுக்கை விரிப்புகள் வேண்டும். நல்ல தரமான படுக்கை விரிப்புகள் தயாரிப்பில் ஒரு பெரிய லாபகரமான தொழில் இருக்கிறது. பால் அண்டு ப்ராஞ்ச் கம்பெனியைத் தொடர்ந்து இன்னொரு கம்பெனியும் இந்த தொழிலில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த கம்பெனியின் பெயர் ப்ரூக் லினன். குவாலிட்டி தான் இவர்களின் தாரக மந்திரம். உலகத்தின் தலைசிறந்த பாக்டரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களிடமிருந்து மொத்தமாக படுக்கை விரிப்புகளை வாங்கி அதை ஆன் லைன் மூலமாக விற்கிறார்கள்.

இவர்கள் கம்பெனி ஆரம்பித்த முதல் மாதமே 200,000 டாலர் விற்பனையை எட்டி ஒரு சாதனை படைத்துள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இவற்றை ஆன்லைன் முறையில் விற்கிறார்கள். இதனால் கடைகளுக்கு கொடுக்க வேண்டிய கமிஷன்கள் இல்லை. நேரடியாக கஸ்டமர்களுக்கு வியாபாரம் செய்வதால் விலை குறைத்து கொடுக்கவும் முடிகிறது. இவர்களுடைய வியாபாரம் ஆன்லைன் மூலமாகத்தான் நடைபெறுகிறது.

கிளாசிக் ஷீட்ஸ், லக்சுரி ஷீட்ஸ், கம்பெர்ட்ர்ஸ், தலையணைகள், ப்ளாங்கெட்ஸ் என்று பலவிதமான படுக்கை விரிப்புகள் தரமானவை, நல்ல விலையில் கிடைக்கிறது.

இந்த கம்பெனியின் புராடக்ட்களை பற்றிய ரிவ்யூ மிகவும் நன்றாக இருக்கிறது. இது இவர்களின் புராடக்ட்களின் தரம் பற்றி பேசுகிறது.

இந்திய விலைகளை வைத்துப் பார்த்தால் விலை சிறிது அதிகம் தான். ஆனால் வியாபார நோக்கில் இந்த இணையதளத்தை சென்று பாருங்கள். உங்களுக்கு பல வியாபார ஐடியாக்கள் தோன்றும்.ரிச்சர்ட் என்பவர் ஆரம்பித்த இந்த கம்பெனி உலகளவில் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறது பலருடைய நிம்மதியான தூக்கத்தினால். இவர்களின் இணையதள முகவரி www.brooklinen.com

Spread the lovely business news