இந்தியாவில் பேப்பர் உபயோகம் அதிகரித்து வருகிறது. அதற்காக நாம் லட்சக்கணக்கான  மரங்களை வெட்ட வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம். Phi Factory என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி கண்டுபிடித்துள்ள G-FP என்ற கெமிக்கல், பேக்கேஜிங் துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த கெமிக்கல் பேக்கேஜிங் துறையில் பயன்படுத்தப்படும் பேப்பர்களின் எடையை 21 சதவீதம் குறைக்க உதவுகிறது. அதனால்  விலையும் 9 சதவீதம் குறைகிறது (சிலர் 40 சதவீதம் வரை குறைவதாக தெரிவித்துள்ளனர்). அதன் அர்த்தம் குறைவாக மரங்கள் வெட்டப்படுகிறது. ஒரு டன் பேப்பர் தயாரிக்க  நன்கு வளர்ந்த 3 மரங்கள் வெட்டப்படுவதை இந்த டெக்னாலஜி குறைக்கிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் போது பெட்டிகள் எடைக்காக கொடுக்கப்படும் வாடகை குறைகிறது.

இவர்களின் மற்றொரு கண்டுபிடிப்பான CORRU BOND என்ற ADHESIVE அட்டைப் பெட்டிகள் தயாரிப்புகள் தொழிலில் அதிக எடைகளை தாங்கும் வகையில் பெட்டிகளை தயாரிக்க உதவுகிறது. 

உலகளவில் போலியான பொருட்கள் தயாரிப்பதால் சுமார் 45 லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பாகிறது.  இதை தடுப்பதற்காக உங்களது ஒரிஜினல் தயாரிப்பில் போடும் code களில் உபயோகப்படுத்த த்ரி டைமன்ஷனல் செக்யூரிட்டி இங்க் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது 3DS இங்க் எனப்படுகிறது. QR code அல்லது BAR CODE ஆகியவைகளை எளிதாக காப்பி செய்ய முடியும். ஆனால் இந்த இங்கை code களில் உபயோகிப்பதன் மூலம் எளிதாக காப்பி செய்ய முடியாது. அதே சமயம் ஸ்மார்ட்போன் மூலமாகவும் படிக்க இயலும். இதனால் போலியான பொருட்கள் தயாரிப்பு, விற்பனை ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது.

இது போன்ற பல புதுமையான கண்டுபிடிப்புகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளது இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி.

இவர்களின் இணையதளம் www.phifactory.tech. இதில் சென்று பாருங்கள் இவர்களின் பல கண்டுபிடிப்புகள் உங்களுக்கு தெரிய வரும். அவற்றை உபயோகப்படுத்துவதன் மூலம் பல லட்சங்களை நீங்கள் சேமிக்க முடியும். 

Spread the lovely business news