கொரோனாவின் கெடுபிடியால்…  விசேஷங்களில் பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்ததற்க்கு பதிலாக விருந்தினர் கைகளுக்கு சானிடைசர் தெளித்தும்,  முகத்திற்க்கு மாஸ்க் கொடுத்தும் வரவேற்கின்றனர்.    பந்திகளில்  உணவு  பரிமாறியது போக   இப்போது கையில் பார்சல் கொடுத்து அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது,  எங்கும் எதிலும் எப்போதும் சமூக இடைவெளியே பிரதானம்..  

ஊரடங்கு முடக்க நிலை படிப்படியாக தளர்த்தப்படும் சூழலில் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது கட்டாயமாகிறது.  அத்தகைய சானிடைசர் கிருமி நாசினியை பலரும் கையால் தொட்டு பயன்படுத்துவது பாதுகாப்பற்றது.  இதுபற்றி சிந்தித்த மதுரையில்  அரண் டெக்னாலஜிஸ் (Aran Technologies) நிறுவனத்தை  சேர்ந்த பொறியாளர்  நண்பர்கள் தீபன் மற்றும் பிரசன்னா ஆட்டோமேட்டிக் சானிடைசர் இயந்திரம் வடிவமைத்து இதற்கான தீர்வை உருவாக்கியுள்ளனர். 

இதன் நிறுவனர் தீபன் அவர்களுடனான  தொலைபேசி கலந்துரையாடலில் சில பகுதிகள்…

“எங்கள் நிறுவனம் தனது பெயருக்கேற்ப தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து  பாதுகாப்பு ஏற்பாடுகளையும் “பாதுகாப்பு அரணாக” இருந்து செய்து கொடுப்பதோடு இப்போது மக்களின் தூய்மைக்கும் அரணாக இருந்து பணியாற்றுகிறோம் என்பது குறிபிடத்தக்கது” என்றார்.  

கொரோனா வைரஸ் கண், மூக்கு,  வாய் ஆகிய பகுதிகளை தொடுவதன் மூலம் பரவுகிறது எனவே கைகளை அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த ஆட்டோமேட்டிக் சானிடைசர் இயந்திரத்தில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால் மனித கைகள் பட வேண்டிய அவசியமில்லை. இந்த தெளிப்பான்  கீழே நாம் கைகளை நீட்டினால் போதும் தானாக 5 மிலி அளவிற்கான கிருமிநாசினி கைகளில் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பு அம்சங்கள் பல.. 

ஒரு வருட வாரண்டி உத்திரவாதம்.

12  லிட்டர் வரை கிருமிநாசினி கொள்ளளவில் கிடைக்கிறது.

சூரிய ஒளி பாதுகாப்பு (Sunlight Protection) உள்ளதால் திறந்தவெளியிலும் வைக்கலாம். 

இந்த டிஸ்பென்சரில் கை படாததால் நோய் பரவல் தடுக்கப் படுகிறது. 

கைகளில் சானிடைசர் தெளிப்பதற்காக வாசலில் தனி நபரை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. மனித உழைப்பும் பணமும் சேமிக்கப் படுகிறது.

கிருமிநாசினி தெளிக்கும்  அளவினை தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம். 

கருவியில் கிருமிநாசினி அளவு காட்டும் தொழில்நுட்பம் உள்ளதால்  மருந்து அளவு குறையும் போது உடனடியாக நிரப்பிக் கொள்ளலாம். 

இந்நிறுவனத்தினர் உற்பத்தி செய்யும்  தொழிற்சாலை பாதுகாப்பு கருவிகள் மற்றும் நுணுக்கங்களை  பாலிடெக்னிக் ஒன்றில் ஒரு பாடப்பகுதியாக வைத்துள்ளார்கள் என்பது பாராட்டத்தக்கது. 

உங்கள் எதிர்கால தொலை நோக்கு பார்வை என்ன என கேட்டபோது,  “விமானம் கண்டுபிடித்த ரைட் பிரதர்ஸ் போல நண்பர்களாகிய நாங்கள் இருவரும் இணைந்து புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க ஆசை” என்றார். முடியும் என்றால் முடியும் என சொல்லி அட்வான்ஸ் வாழ்த்து கூறி விடை பெற்றேன். 

தொடர்புக்கு : 93441 77711 / 97867 09099   வெப்சைட்    : www.arantech.in

Spread the lovely business news