7 MUDAS

 தொழில் (தரத்தில்) தொடர்ச்சியான முன்னேற்றம் வேண்டுமென்றால் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் ஏற்படக்கூடிய அனைத்து விரயங்களையும் முறையாகவும்,  தொடர்ச்சியாகவும் தவிர்க்க “5S” பயன்படுத்த வேண்டும் என கடந்த இதழ் கட்டுரை மூலமாக அறிந்தோம்.

அந்த விரயங்கள் எவை? விரயம் என்றால் என்ன?

ஒரு பொருளினாலோ, ஒரு செயலினாலோ எந்தவிதமான இலாபமும் இல்லாமல் இருப்பதே விரயம் ஆகும். இதையே ஆங்கிலத்தில் “Waste” என கூறுகிறோம். இந்த விரயம் (Waste) என்பதையே ஜப்பானிய மொழியில் “MUDAS” என்கிறோம்.

விரயங்கள் மொத்தம் 7 வகைப்படும். அவை 7 முடாஸ் (Mudas) என அழைக்கப்படும். அவற்றை கீழே விரிவாக காண்போம். 

1.   MUDAS of Waiting ( காத்திருக்கும் விரயம் அதாவது தேவையற்ற காத்திருப்பு). 

மனிதர்கள், இயந்திரங்களை தேவையில்லாமல் செயலற்ற நிலையில் வைத்திருப்பது “MUDAS of Waiting” ஆகும். இது ஏற்படக் காரணங்கள் என்ன?

1.    திட்டமிடப்படாத செயல் திட்டம் 

2.    தொழிலாளர்களால் வீணாகும் நேரம். (operator simply monitoring the machine when machine works on its auto-cycle).

3.    வழிமுறைகள் கூறியதில் குறைபாடு – (Lack of Instructions)

4.   மூலப்பொருட்கள் கிடைப்பதில் தாமதம்  

MUDAS of waiting கால் ஏற்படக் கூடிய நஷ்டங்கள்:

மனித , இயந்திர ஆற்றலை பயன்படுத்துவது குறைவு – (Poor Utilization of men & Machine) மற்றும் திறமைகளை குறைவாக பயன்படுத்துவது.

2.       MUDAS of Overproduction (அதிகப்படியான தேவையற்ற உற்பத்தி)

தேவையில்லாமல் அளவுக்கதிகமாக பொருட்களை உற்பத்தி செய்வதே “MUDAS of over Production” ஆகும். இது ஏற்படக் காரணங்கள் என்ன?

1. வாடிக்கையாளர்களின் தேவையை அறியாமல் இருப்பது.

2. திட்டமிடப்படாத உற்பத்தி திட்டம் (lack of Production plan).

“MUDAS of over Production” னால் ஏற்படக் கூடிய தீமைகள்:

I. அதிகப்படியான Store Room / Ware House.

II. தேவையற்ற போக்குவரத்து.

III. தேவையற்ற மூலப்பொருள் பயன்பாடு.

3.       MUDAS of Stock (அதிகப்படியான தேவையற்ற பொருள் கையிருப்பு)

MUDAS of stock (Inventory) தேவையில்லாமல், அளவுக்கதிகமாக பொருட்களை கையிருப்பில் வைத்திருப்பதே “MUDAS of stock” ஆகும். இது ஏற்படக் காரணங்கள் என்ன?

I. திட்டமிடப்படாத செயல் திட்டத்தால் பொருட்களை வாங்கி/ உற்பத்தி செய்து வைத்திருப்பது.

“MUDAS of stock” னால் ஏற்படக் கூடிய தீமைகள்:

1. நிறுவனத்தின் பணமானது தேவையில்லாமல் முடங்கிவிடும்.

2. தேவையற்ற இடப்பயன்பாடு.

3. அதிகப்படியான தேவையற்ற மனித உழைப்பு (for material handling, stores assistants)

4. பொருளுக்கான தேவையற்ற காப்பீடு.

4.   MUDAS of Transport (அதிகப்படியான தேவையற்ற போக்குவரத்து)

MUDAS of transport தேவையற்ற அவசியமில்லாத போக்குவரத்தும் ஒரு விரயம் ஆகும். இது ஏற்படக் காரணங்கள் :

1.திட்டமிடப்படாத செயல்திட்டம் (வேலை) (Improper work flow chart).

MUDAS of transport டால் ஏற்படக் கூடிய தீமைகள்:

1. தேவையற்ற போக்குவரத்தின் போது மனிதர்கள், பொருட்களுக்கு சேதம் ஏற்படலாம்.

2. அதிகப்படியான மனித உழைப்பு வீணாகும்.

3. பொருட்களை கையாளும் செலவு அதிகமாகும்.

4. தேவையற்ற சேதாரம் (Rejection/Rework) ஏற்படும்.

5.       MUDAS of Defects (அதிகப்படியான தேவையற்ற சேதாரம்)

MUDAS of Defects தேவையற்ற சேதாரங்களே “MUDAS of Defects” ஆகும். இது  ஏற்படக் காரணங்கள்:

1. தவறான மூலப்பொருளை கையாளுதல்.

2. தவறான பொருள் வடிவமைப்பு (Incorrect Product design)

3. இயந்திரங்களை பராமரிப்பதில் குறைபாடு.

4. தவறான செயல் திட்டம்.

5. திறன் குறைந்த ஊழியர்களை பயன்படுத்துதல்.

MUDAS of Defects ஏற்படக்கூடிய தீமைகள்:

1) பணம், நேர விரயம்

2) தரத்தில் கவனமின்மை (குறைபாடு).

6.       MUDAS of Motion (அதிகப்படியான தேவையற்ற அலைச்சல்)

தேவையற்ற திட்டமிடப்படாத அலைச்சல்களே ”MUDAS of motion” 

ஆகும். இது ஏற்பட காரணங்கள் என்ன?

1) திட்டமிடப்படாத செயல்திட்டம்(Lack of production Plan/layout)

2) சரியான கண்காணிப்பு இல்லாதது (Ineffective supervision).

MUDAS of motion ஏற்படக்கூடிய தீமைகள்:

1. மனித உழைப்பு வீணாகும்.

2. நேர விரயம்.

7.       MUDAS of Processing (அதிகப்படியான தேவையற்ற செயல்பாடு)

தேவையற்ற திட்டமிடப்படாத செயல்களே “MUDAS of Processing” ஆகும். இது  ஏற்பட காரணங்கள் என்ன?

1. தெளிவற்ற உற்பத்தி திட்டம்.

2. சரியான மூலப்பொருட்களை பயன்படுத்தாதது.

3. செயல்களில் தேவையற்ற தடைகளை உருவாக்குவது. (Unnecessary Split-up of operations)

MUDAS of Processing ஏற்படக்கூடிய தீமைகள் என்ன?

1. பொருள் , நேர விரயம்

2. தரத்தில் குறைபாடு.

எனவே மேற்கண்ட விரயங்களை (7 MUDAS) தவிர்ப்பதன் மூலமாக நம் பொருள்/ சேவையின் தரத்தினை (Product/Process Quality) உயர்த்தலாம். இந்த விரயங்களை தவிர்ப்பது ஏதேனுனும் வழி உள்ளதா? ஆம் உள்ளது. அதன் பெயர் தான் “POKA YOKA” . அதைப்பற்றி அடுத்த இதழில் அறிவோம்.

(தொடரும்)

தொடர்புக்கு : 98422 84311

Selvirajan28@gmail.com

Spread the lovely business news