தரம் உங்கள் பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது. ஸ்டார்ட் அப் கம்பெனிகள் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதை உங்களுக்கு இந்த தொடர் கட்டுரை மூலமாக எடுத்துரைக்கிறார் மதுரையை சேர்ந்த செல்வ சுந்தர் ராஜன். இவர் தர நிர்ணயம் பற்றி பல இடங்களில் வகுப்புகள் எடுத்து வருபவர்.

5S

தரம் என்பது ஒரு பெரிய கடல் போன்றது. அதில் பல நல்ல விலைமதிப்பற்ற முத்துக்கள் (5S, 7 wastages, Poka Yoka, ISO,..) உள்ளது. அவற்றில் ஒரு தொழில் நிறுவனத்திற்கு தேவையான முதல் முத்து (மிகவும் அடிப்படை) “5S” ஆகும்.

5S” என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

தொழிலில் (தரத்தில்) தொடர்ச்சியான முன்னேற்றம் வேண்டுமென்றால் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் ஏற்படக்கூடிய அனைத்து விரயங்களையும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் தவிர்க்க வேண்டும். இந்த விரயங்களை தவிர்ப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ உள்ள வழிமுறைகள் தான் “5S” ஆகும்.

இவை “ஜப்பானிய சொற்கள்” ஆகும். அவை,

SEIRI – செய்ரி – Organization (அப்புறப்படுத்துதல்)

SEITION – செய்டன் – Neatness (ஒழுங்குபடுத்துதல்)

SEISO – செய்சோ – Cleaning (துப்புரவாக்குதல்)

SEIKETSU – செய்கெட்சு – Standardization (நிர்ணயித்தல்)

SHITSUKE – சிட்சுகே – Discipline (பயிற்சியும் கட்டுப்பாடும்)

இவையே “5S” ஆகும்.

SEIRI

நாம் ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை அன்று “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்கிறோம். தேவையற்ற பொருட்களை களைவதற்கும், தேவையுள்ளவைகளை சரியாக வைத்துக் கொள்வதற்கும் உறுதியான குறிக்கோள் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இந்த குறிக்கோள் தான் ஜப்பானிய மொழியில் “SEIRI” என்று அழைக்கப்படுகிறது.

SEITION:

தேவையுள்ள பொருட்களை தேவைக்கேற்ப வகைப்படுத்துவது முக்கியம். தொழிற்சாலைகளில் பொருட்களின் உபயோகத்திற்கு தகுந்தபடி அடிக்கடி தேவையானவை, அவ்வப்போது தேவையானவை, எப்போதாவது தேவையானவை என வகைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் உரிய இடத்தை ஏற்படுத்தி வைக்கும் போது, பொருட்களை தேடி அலைவதினால் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுகின்றது. சரியான பொருட்களை சரியான நேரத்தில் பயன்படுத்துவதால் பொருட்களின் தரம் உயர்த்தப்படுகிறது. இதைத் தான் ஜப்பானிய மொழியில் “SEITION” என்று அழைக்கிறோம். இதானல் மொத்த பொருட்களின் எண்ணிக்கையை எளிதாகக் கண்டறிய முடியும்(Inventory control).

SEISO:

வேலை பார்க்கின்ற இடமும், நாம் வேலை பார்க்கும் இயந்திரம் மற்றும் கருவிகளும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

நமது நாட்டில் “செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமை தான் நமது செல்வம்” என்று ஆண்டுக்கு ஒருமுறை தொழிலுக்கு வந்தனம் செய்யும் விதத்தில் “ஆயுத பூஜை” / ”விஸ்வகர்மா பூஜை” கொண்டாடுகிறோம். இதற்கு தேவையான செய்கைகள், துலக்குதல், துடைத்தல், பெருக்குதல், கருவிகளை ஆய்வு செய்தல், பாலிஷ் அடித்தல் போன்றவை ஆகும். இந்த துப்புரவாக்குதல் வேலையை ஜப்பானிய மொழியில் “SEISO” என்று அழைக்கிறோம்.

SEIKETSU:

எந்தெந்த பொருட்களை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும் என நிர்ணயம் செய்வதையே ஜப்பானிய மொழியில் “SEIKETSU” என்று அழைக்கிறோம்.

SHITSUKE:

5S”ல் இதுவே மிகவும் முக்கியமானது மற்றும் கடினமானது!!! ஆம், ”SEIRI, SEITON, SEISO, SHITSUKE” வை ஏற்படுத்தினால் மட்டும் போதாது. அதை தொடர்ந்து நடைமுறை படுத்த வேண்டும். அதற்கு தேவையான கட்டுப்பாடும், பயிற்சியும் மிகவும் முக்கியம். இதையே ஜப்பானிய மொழியில் “SHITSUKE” என்று அழைக்கிறோம்.

எனவே, மேற்கண்ட “5S” செயல்முறைகளை நாம் நம் தொழிலில் மேம்படுத்தி நம் தரத்தினை (Product & Process quality) உயர்த்துவோம். ஒருவேளை நாம் “5S” செயல்முறைகளை நடைமுறைபடுத்தவில்லை என்றால் நாம் அதிவிரைவில் சந்திக்கவிருப்பது “5D”, 7MUDAS ஆகும்.

அது என்ன “5D”? அதாவது?

Delays – தாமதங்கள்

Defects – குறைபாடுகள்

Dissatisfied Customer – வாடிக்கையாளர்கள் அதிருப்தி

Declining Profits – குறைந்து வரும் லாபங்கள்

Demoralized employers – உற்சாகம் குறைந்த ஊழியர்கள்

எனவே, நம் தொழிலில்(தரம்) “5S” மேம்படுத்தவில்லையென்றால் ”5D” உருவாவது தவிர்க்க முடியாது.

அது சரி அது என்ன “7 MUDAS”? அடுத்த இதழில் காண்போம்

(தொடரும்)

Spread the lovely business news