தரம் உங்கள் பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது. ஸ்டார்க் அப் கம்பெனிகள் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதை உங்களுக்கு இந்த தொடர் கட்டுரை மூலமாக எடுத்துரைக்கிறார் மதுரையை சேர்ந்த செல்வ சுந்தர் ராஜன். இவர் தர நிர்ணயம் பற்றி பல இடங்களில் வகுப்புகள் எடுத்து வருபவர்.

………………………..

தரம் – Quality 

தரம் (Quality) என்பது எல்லோராலும் தற்சமயம் பேசப்படும் தாரக மந்திரம். இத்தாரக மந்திரம் தொழிலகங்கள்,  வர்த்தக  நிறுவனங்கள்  மற்றும்  அரசாங்க  அமைப்புகள்  அனைத்திற்கும் பொருந்தும்  கிரியா  ஊக்கி  ஆகும்.  ஏனெனில்  வாடிக்கையாளரின்  தேவையை  செவ்வன பூர்த்தி செய்வதே “தரம்” ஆகும்.

ஆம் தரம் என்பதை வாடிக்கையாளர் திருப்திக்கு ஈடானதாக எடுத்து கொள்ளலாம்.

பல  தடைகள் நீக்கப்பட்டு,  பொருளாதர நோக்கில்  ஒரே சந்தையாக மாறியுள்ள தற்போதை உலக  சந்தையில் உங்கள் பொருளும் ஜெயிக்க வேண்டுமா? அப்படியானால் நீங்களும்   தரத்தில் (Quality)   கவனம்   செலுத்த வேண்டும். அப்படி தான் உலகளவில் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. 

Quality என்பதை இப்படி கூறலாம், Q = P/E

Q = Quality

 P = Performance

 E = Expectation

தரம்   (Quality)   என்பதை   பல்வேறு   காலங்களில்,   பல்வேறு   தர   வல்லுனர்களால் (Quality Gurus) விளக்கப்பட்டிருக்கிறது.  

தரம் பற்றி  வல்லுனர்களின் விளக்கங்களை கீழே பார்ப்போம்:

1) Quality is producing a product or service of quality which is always satisfactory to the customer.

– Dr. K. Ishikawa

2) Quality of a product is one which performs consistently well & in constantly improves.

– Dr. W.E. Deming

3) Doing a thing right first time.

– Philips Crosby

4) Fitness for use.

– Dr. J.M. Johnson

5) Quality is a state in which value entitlement is realized for the customer & provider in every aspect of the business relationship.

– Six Sigma concept

தரத்தின் பல்வேறு நிலைகள்

தரம்  பற்றி நீங்கள் படிக்கும் போது அல்லது அறியும் பல்வேறு நிலைகளை படித்திருக்கலாம் அல்லது அறிந்திருக்கலாம். அவைகளில் குறிப்பிட்டவைகள் என்று பார்க்கப் போனால் 5S,  7QC  Tools,  Advance  Product Quality Plan – APQP, Six Sigma, Control Charts, DMAIC, FMEA, Failure Mode Effective Analysis, Histogram, ISO, Lean management, MSA – Measurement System Analysis, Poka Yoka, SPC – Statistical Process Control, PDCA Cycle, Process Capability, Production part approval process – PPAP, QMS-Quality Management Systems, Root Cause Analysis, TPM, TQM, Waste Elimination – என்று சொல்லலாம்.  இவை    அனைத்தும்    ஒவ்வொரு    குறிப்பிட்ட    காலங்களில்,    ஒவ்வொரு   தர வல்லுனர்களால் உருவாக்கப்பட்டது.

1924  – Dr. W.A. Shewart (USA) என்பவரால் ‘Statistical Control Chart’ உருவாக்கப்பட்டது. இதன் மூலமாக இயந்திரத்திலிருந்து பொருள் வெளிவரும் போது அதன் அளவுகளை (dimension) கட்டுப்படுத்தலாம்.

  • நாம் தற்போது இன்ஸ்பெக்ஷன் செய்யும் போது 100

சதவீதம் பொருட்களில் செய்வதில்லை, சாம்பிளிங் முறையை தான் பயன்படுத்துகிறோம். இந்த முறை H.F     Dadge     &     H.G.     Roming        என்பவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இது நிறைய மனித நேரத்தை சேமிக்கிறது.

1940   –   பல்வேறு Quality Association and Society – கள் உருவாக்கப்பட்டன.

1946 – அமெரிக்கன் சொசைட்டி ஃபொர் குவாலிட்டி   உருவாக்கப்பட்டது. Japanese Quality Union உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினர்  Dr.K.Ishikawa

1931   –   Indian Statistical Institute உருவாக்கப்பட்டு 1940ல் செயல்படத் துவங்கியது.

1950   –   “Deming” எனும் பிரபல Quality Award அறிமுகப்படுத்தப்பட்டது

1954   –   “”Total Quality Management” எனும் system உருவாக்கப்பட்டது

1980   –   “”Statistical Quality Control Technique” உலக அளவில் பிரபலமானது

1987   –   ISO 9000 உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது

1990   –   EMS (Environmental Management System) ISO 14000, OSHAS (Occupational Safety & Hazard System) ISO 18000 உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2000   –   Malcolm Ballridge Award மற்றும் European Quality Award போன்ற விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தரம் என்பது  ஒரு  பெரிய  கடல்  போன்றது.  அதில்  பல  நல்ல  விலைமதிப்பற்ற முத்துக்கள்  (5S, SPC, MSA, Poka, Yoka, PPAP)  உள்ளது.  இனி  பின்வரும்  இதழ்களில் ஒவ்வொரு முத்தினைப் பற்றி அறிந்து அதன் மூலம் நம் பொருள் / சேவையின் தரத்தினை (Product & Service Quality) உயர்த்துவோம்.

 “Quality – It is an endless Journey”.

“Quality is a moving target & there is no finish line with the right attitude we can conquer the world”.

தொடர்புக்கு : 98422 84311 / selvirajan28@gmail.com

Spread the lovely business news