1. தனிநபர் வசிப்பிடமாக கருதப்படும் வீடுகளுக்கு செலுத்தப்படும் வாடகைக்கு சரக்கு மற்றும் சேவை வரிவிதிக்கப்படுகிறதா ?

ராஜன் – கோவை

இல்லை.  தனி நபர் குடியிருப்பிற்காக வாடகைக்கு விடப்படும் வீடுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட மாட்டாது, இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குடியிருப்பு வீட்டினை வணிக நோக்கங்களுக்காக வாடகைக்கு விட்டிருந்தால் வரி விதிக்கப்படும். குடியிருப்பு வீட்டு வாடகை வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அந்த நபரின் மொத்த விற்பனை கூட்டு தொகைக்கு சேர்க்கப்படும். 

  1. பெட்ரோல் பங்குகள் தமது நிறுவனத்தினை மதிப்புக் கூட்டு வரி மற்றும்  ஜி.எஸ்.டியில் பதிவு பெற வேண்டுமா?

சுப்பிரமணியன் –  தென்காசி

ஆமாம்.  கண்டிப்பாக தனித்தனி பதிவு பெறப்பட வேண்டும்.  பெட்ரோல் மற்றும் டீசல் வாட் வரி விதிப்பிற்குள்ளும்,  இன்ஜின் ஆயில் போன்றவை ஜி.எஸ்.டிக்குள் பதிவு செய்யவேண்டும்.

  1. ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறிப்பிட்ட ஏரியாவிற்கென விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதா?

கதிரவன் – திருச்சி 

ஜி.எஸ்.டி.யில் இத்தகைய சிறப்பு சலுகை எதுவும்  அளிக்கப்படவில்லை.

  1. ஒரு வணிகர் தனது வணிகத்தில் அதுவும் குறிப்பாக வரிவிதிப்பு விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே  விற்பனை செய்கிறார் எனில்  இவர் தனது மாதாந்திர ரிட்டர்ன்களை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டுமா?

கவிஞர் பெருமாள் – கடலூர் 

நிச்சயமாக தாக்கல் செய்ய வேண்டும்.  ஒரு முறை பதிவுசான்றிதழ் பெற்று விட்டால் கட்டாயம் ரிட்டர்ன் தாக்கல் செய்தே ஆக வேண்டும்.  விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு எதற்கு பதிவு சான்றிதழ் என ரத்து செய்து விடாதீர்கள், ஏனெனில் வங்கி மற்றும் இதர துறைகளுக்கு நமது விற்பனைக்கு இதுவே அத்தாட்சியாக இருக்கும்.

  1. எனது வணிகம் முழுவதும் ஏற்றுமதியே ஆகும்.  இந்த நிறுவனங்களுக்கு கண்டிப்பாக பதிவு சான்றிதழ் அவசியமா?

மதன் – உடுமலைப்பேட்டை

கண்டிப்பாக பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.  ஏற்றுமதிகள் ஜீரோ ரேட் ஆக இருந்தாலும் ஏற்றுமதி ரீபண்ட் பணம் பெறுவதற்கு தேவைப்படும்.

Spread the lovely business news