கண்ணன், சேலம்:  ஒரு வணிக நிறுவனத்தின் முகப்பில் அல்லது வாசலில் கண்டிப்பாக பெயர் பலகை (Display of Name Board) வைக்க வேண்டுமா?

ஜி.எஸ்.டி சட்டப்படி, வணிக நிறுவனத்தின் முன்பு கட்டாயம் பெயர்பலகை வைக்க வேண்டும். கலவை வணிகராக இருந்தால் (Composition Dealer) கண்டிப்பாக ஜி.எஸ்.டி நம்பரையும் அதில் குறிப்பிட வேண்டும்.

முருகன், திருச்சி : எல்லா செலவுகளிலும் உள்ள ஜி.எஸ்.டி வரிகளை உள்ளீட்டு வரி வரவாக எடுத்துக் கொள்ள முடியுமா (Input tax credit)?

கண்டிப்பாக வரி வரவினமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வியாபார நோக்கத்திற்காக கொள்முதல் செய்யப்படும் மூல பொருட்கள், சர்வீஸ்கள் மற்றும் மூலதன பொருட்கள் (Raw materials, Services, & Capital goods) மட்டும் தான் வரி வரவினமாக  எடுத்துக் கொள்ளலாம்.

ராமு, சென்னை :   ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் எத்தனை வருடங்கள் கணக்கு புத்தகங்களை பராமரிக்கப்பட வேண்டும்?

ஜி.எஸ்.டி.யில் வருடாந்திர நமுனா படிவம் (Filing of Annual Return) தாக்கல் செய்ததிலிருந்து 72 மாதங்கள் வரை கணக்குகளை பராமரிக்க வேண்டும்

குரு, காரைக்குடி  : ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் அனைத்து வகை கொள்முதல்களையும், விற்பனைகளையும் (Purchases & sales) எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஜி.எஸ்.டி சட்டத்தில் கொள்முதல்களை Inward Supply என்றும் விற்பைனகளை  Outward Supply என்றும் அழைக்கப்படுகிறது.

சிவப்பிரகாசம் கோவை : ஒரு வணிகர் தனது மாதாந்திரம் தாக்கல் செய்யக் கூடிய ரிட்டர்ன்களை தாக்கல் செய்யவில்லை,  இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி கூறவும்?

பதிவு சான்றிதழ் பெற்ற அனைவரும் வரி இருந்தால், உரிய தேதிக்குள் வரியை செலுத்தி மாதாந்திர படிவத்தை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும், இல்லையெனில் தாமத்துக்கான வட்டியும் அபராதத் தொகையும் செலுத்த வேண்டும்.  இப்பொழுது அனைத்தும் இணைய தளம் மூலம் தாக்கல் செய்வதால் வெளிப்படையாக உள்ளது.

Spread the lovely business news