இறைவன் தந்த இயற்கையானகாற்றை நாம் சுதந்திரமாக சுவாசிக்க கூட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.  முகக் கவசம் அணிந்து  வேறு  நபருடன் பேசும்போது நாம் சிரிக்கிறோமா  அல்லது கோபப்படுகிறோமா என்பதை வெளிப்படுத்த முடிவதில்லை, எளிதாக மூச்சு விட முடிவதில்லை.  தொடர்ந்து முகக்கவசம் அணிய முடியாமல் தவிக்கிறோம்.  ஒட்டுமொத்த மனித குலமும் கொரோனா வைரசுக்கு பயந்து நடுங்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறது.  

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி ஒரு முக கவசத்தை அதுவும் ட்ரான்ஸ்பரன்ட் ஆகவும், உங்கள் முகத்தின் உணர்ச்சிகளை காட்டும் விதமாகவும் அதேசமயம் உங்களால் வெளிக்காற்றை சுவாசிக்க வசதியாகவும் ஒரு முககவசத்தை கண்டுபிடித்திருக்கிறது. 

அதை சந்தைக்கு  கொண்டுவரும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளனர். அடுத்த வருட ஆரம்பத்தில் கடைகளுக்கு வர இருக்கிறது.

இந்த ஸ்டார்ட் அப் ஐடியா எப்படி வந்தது என்று பார்த்தால் 2015 ஆம் வருடம் எபோலா என்ற வைரஸ் பல நாடுகளை தாக்கியது.  அப்போது முகக்கவசத்தை  தொடர்ந்து அணிய மிகவும் சிரமப்பட்டனர்.  முகக்கவசம் அணிந்திருப்போர்,  குறிப்பாக டாக்டர்கள் தங்கள் உணர்வுகளை  முகபாவம் மூலம் எதிரில் இருப்பவர்களுக்கு  காட்ட முடியாமல் தவித்தனர்.  நோயாளியாக இருக்கும் ஒரு குழந்தையிடமோ வயதானவரிடமோ மருத்துவர் பேசும்போது, அவர்  ஒரு புன்னகையை  உதிர்த்தாலே போதும்.  அதுவே  அந்த நோயாளியை பாதி குணமாக்கிவிடும் என்பது உண்மை.  முகக்கவசம் அணிந்திருக்கும்போது புன்னகையைக் காட்ட இயலாமல் போய்விடுகிறது. முகக்கவசம் அணிந்திருக்கும்போதும், நம் முகம் முழுவதும் எதிரில் இருப்பவருக்குத் தெளிவாகதெரியும் வகையிலும், டிரான்ஸ்பரன்டாகவும்,வெளிக்காற்றை எளிதில் சுவாசிக்க வசதியாகவும்,   அதேசமயம் நோய்க்கிருமிகளை உள்ளே விடாத  வகையிலும் ஒரு முகக்கவசம் இருந்தால் எப்படி இருக்கும்? இதையெல்லாம் மனதில் வைத்துதான் சுவிஸ் நாட்டில்  École polytechnique fédérale de Lausanne (EPFL) – (www.epfl.ch) என்ற ஆராய்ச்சி நிறுவனம், அதே  நாட்டில் இருக்கும் Swiss Federal Laboratories for Materials Science and Technology – EMPA (www.empa.ch)  மெட்டீரியல் சயின்ஸ் ரிசர்ச் சென்டருடன் இணைந்து ஆராய்ச்சி செய்து, இது போன்ற ஒரு துணியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இதை HMCARE என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் மூலம் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்கள். 

பயோமாஸ் மூலம் பெறப்பட்ட  டிரான்ஸ்பரன்டான இழைகளைப் பயன்படுத்தி  மூன்று அடுக்கு கொண்ட,  நெகிழ்வான, எளிதில் சுவாசிக்க வசதியான  ஒரு துணியை உருவாக்கினர் , அது  கிட்டத்தட்ட  டிரான்ஸ்பரன்டான – லேசாக உறைந்த கண்ணாடி போன்றது. இந்தத் துணியால் தயாரிக்கப்படும் முகக்கவசத்தை ஹலோ மாஸ்க் (Hello Mask) என்று அழைக்கிறார்கள். 

கடந்த பல வருடங்களாக இணைந்து நடத்திய ஆராய்ச்சி முடிவில் முன்பு சொன்னது போன்ற முகக்கவசத்தை தயாரிக்க முடியும் என்ற  நிலைக்கு வந்துள்ளனர்.  இது இந்த வருட கடைசியில் அல்லது 2021 ஆரம்பத்தில் கடைகளில் விற்பனைக்கு வரும்.

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதளங்களை பாருங்கள். பல நல்ல விவரங்கள் கிடைக்கும்.

Spread the lovely business news