திருப்பூரில் ஸ்டார்ட் அப் முறையில் தொடங்கப்பட்டு இப்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் கேலக்ஸி மெரிடியன் (Galaxy Meridian) நிறுவனத்தார் வாடிக்கையாளர்களின் கருத்துக்கு, விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதால் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள்.  இது ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனம்.  இதில் பங்குதாரர்கள்  திருமதி. பூர்ணிமா தேவி, திரு. கிரிஷ் குமார்,  திரு.  கணேஷ் தியாகராஜன், ஈஸ்வர்யா சாய் ஆகியோர்.

பிக் டிராலி (Big Trolley) எனும் செயலியை (App) இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த பிக் டிராலி என்பது பல சேவைகளைத் தரும் ஆன்லைன் ஷாப்பிங் ஆண்ட்ராய்ட் செயலி.   இது மிக நவீன தொழில் நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

அன்றாட தேவைகளுக்கு நவீன முறையில் தீர்வுகளை சுலபமாக வழங்குவதே இவர்களது நோக்கம்.  ஆமாம் ரொம்ப சிம்பிளாக உங்கள் சட்டை பாக்கெட்டில் சூப்பர் மார்க்கெட்டை செயல்பட வைத்திருக்கிறார்கள். 

நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் மூலம்  ப்ளே ஸ்டோரில் பிக் டிராலி (Big Trolley)  app  டவுன்லோட் செய்து அதன் மூலம் ஆர்டர் செய்தால் போதும். அடுத்த 45 நிமிடத்திற்குள் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களுடன் உங்கள் கதவை இவர்கள் தட்டுவார்கள்.  அதுவும் இலவச டோர் டெலிவரி. 

இப்போது திருப்பூர் மக்களுக்கு  மட்டுமே இத்தகைய சேவை செய்து வருகிறார்கள். விரைவில் தமிழகம் முழுதும் சேவையை விரிவு படுத்த முயற்சிகள்  நடந்துகொண்டிருக்கின்றது. 

காய்கறிகள், பழங்கள், மளிகைப்  பொருட்கள், வீட்டு பராமரிப்பு தேவைகள், பெண்களின் சுகாதாரத் தேவைகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் இவை அனைத்தும் மொத்த வியாபார  விலைக்கே கிடைக்கும்.

“புது வீடு கட்டிடலாம் போலிருக்கு, இந்த சின்ன, சின்ன ரிப்பேர்களை சரி  பார்ப்பதற்கு டெக்னிஷியன்கள்  கிடைக்கவே மாட்டார்கள்” என சொல்லும்   திருப்பூர்வாசிகளுக்கு ஒரு சிறப்பு சேவையை இவர்கள் தருகிறார்கள்.  என்னவென்றால் வீட்டில் ஏற்படும் சின்ன ரிப்பேர்களையும் சரி செய்ய  எலெக்ட்ரீஷியன், பிளம்பர், கார் மெக்கானிக் போன்றவர்களையும் நமது வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

திருமண வைபவமும்   ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.  மாப்பிள்ளை மற்றும்  பெண் வீட்டார் மண்டபம் வந்தால் போதும். மற்ற அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்து தந்து விடுகின்றனர்.  பிறந்தநாள் போன்ற  பார்ட்டிகளும் ஏற்பாடு செய்கின்றனர். 

சிறிய மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தொழில் நுட்ப ஆலோசனைகளையும், வெப்  வடிவமைப்பு மற்றும் உருவாக்குதல் போன்றவையும் செய்து தருகின்றனர்

திருப்பூரை “டிஜிட்டல் சந்தை” இடமாக மாற்ற எண்ணி “காகிதமில்லா பசுமைப் புரட்சி” நடவடிக்கையில் இறங்கி உள்ளார்கள்.  பில்  போன்ற அனைத்தும் உங்களுக்கான மொபைலுக்கு வந்துவிடும்.  திருப்பூரில் மொபைல் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய  நல்ல தீர்வாக செயல்பட்டு வருகின்றனர். 

பிக் ட்ராலியின் பிரதான நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை லாபகரமான விலையில் சரியான நேரத்தில் அவர்களின் வாசலுக்கு இலவசமாக டெலிவரி செய்வதுதான்.  

தனது “மகிழ்ச்சி வாடிக்கையாளர்களை” எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க  அவ்வப்போது தரப்படும்  பொருட்களின் விலைகளில் சிறப்பு தள்ளுபடிகள்,  சலுகைகள்,  மற்றும் சிறப்பு விற்பனை ஆகியவை வாடிக்கையாளர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. 

சுறு சுறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் திருப்பூர்வாசிகள் இனி மொபைல் மூலம் வீட்டில் இருந்தபடியே தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். நேரமும் செலவும் மிச்சம்.  இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள்: www.galaxymeridian.com

Spread the lovely business news