ஐஐடி சென்னை ரிசர்ச் பார்க் (Research Park) வளாகத்திலிருந்து  பல நல்ல ஸ்டார்ட்  அப் கம்பெனிகள்          உருவாகி வருகின்றன. அதில் குறிப்பிடத் தக்க  கம்பெனி எம்.ஜி.ஹெச்.லாப்ஸ் (MGH Labs). அவர்கள் செய்த சாதனை என்னவென்றால் உடலுக்குத் தீங்கு தராத, கெமிக்கல் ஏதும் கலக்காத  வகையில்  கொசுக்களைக் கொல்லும் ஒரு  சிறிய கருவியையும், அதில் உபயோகப்படுத்துவதற்கான கொசுவிரட்டி திரவத்தையும் கண்டு பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள்  சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர்கள்.  இது விலை சிறிது அதிகமாக இருந்தாலும் இந்த சிறிய கருவியில் பொருத்தப்படும் திரவம்  கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இரவு முழுவதும் நம்மை வைத்திருக்கிறது. தற்போது சந்தையில் பலவித கொசுக் கொல்லிகள் இருந்தாலும் இது எவ்வித கெமிக்கலும் சேர்க்காமல் செய்வது  பாராட்டத்தக்கது.  

கொசு இல்லாத ஒரு ஊரை கண்டுபிடித்து அந்த ஊரில் தான்      நீங்கள் தங்க வேண்டும் என்றால் இந்தியாவில் அப்படி ஒரு ஊரைக் காண்பது மிகவும் அரிது.  அந்த அளவு இந்தியாவில் கொசு உற்பத்தி பெருகிவிட்டது.  மாலை  6 மணியானால் எல்லா கதவுகளையும் மூடி விட்டு பின்னர் சில மணி நேரம் கழித்து கதவை திறப்பது பலரின்  வாடிக்கை. கொசு வீட்டிற்குள் வரும் நேரம் மாலை 6 மணி  அளவில்தான் என அவர்கள் எண்ணுவது வேடிக்கை.

கொசுவை ஒழிக்க என்ற போர்வையில் பல விதமான                 கம்பெனிகள் கொசு மருந்துகளையும், கொசுவத்திகளையும்         தயாரித்து சந்தையில் விற்பனை செய்து  பெரிய பணக்காரர்கள் ஆகிவிட்டனர்.  ஆனால் கொசுக்கள் என்னவோ கொழுத்துக் கொண்டுதான் போகிறது. 

அந்தக் காலத்தில் கொசுவத்திகள் எங்கு இருந்தன? நம் தாத்தாக்கள் தினசரி இரவில் கொசுவலை கட்டுவதும், காலை அதை  அவிழ்ப்பதுமாக நேரத்தைச் செலவழித்து, கொசு வத்திக்குப்  பணம் செலவழிக்காமல்  சுகமாகத் தூங்கினார்கள் . ஆனால் நாம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில்        கொசுவலை கட்டுவதற்கும், அவிழ்ப்பதற்கும் எங்கு நேரம் என்று கொசுவத்திகளையும், மருந்துகளையும் வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். அந்த மருந்துகளில் பலவிதமான ரசாயனப்பொருட்கள் கலந்திருப்பதால் அது பலவிதத்தில் தீங்குகள்         விளைவித்தாலும்,  அதுதான் இரவில் நம்முடைய சுகமான         தூக்கத்திற்கு தற்போதைய வழிகாட்டி என நம்முடைய வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்துவிட்டது.

தற்போது சந்தையில் இருக்கும் கொசுவர்த்தி மருந்துகளை உபயோகிப்பவர்களுக்குப் பலவிதமான அலர்ஜிகள்வருகிறது. அதுபோன்ற அலர்ஜிகள் நமக்கு வராமல், இரவு முழுவதும்     கொசுக்களை பிடிப்பதிலையிலேயே  கவனமாக இருக்கிறது     இந்த சின்ன கருவி.

சென்னை ஐ.ஐ.டி. ரிசர்ச் பார்க்குக்கு ஒரு சல்யூட்….இதைக்        கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு சல்யூட்.

Spread the lovely business news