உலகத்தில் கொடிய நோய்களில் ஒன்று கேன்சர்.  யாருக்கு வரும், எப்போது வரும், உடலில் எந்த இடத்தில் வரும் என்று சொல்ல முடியாத ஒரு நோய். தன் குடும்பத்தில் ஒருவருக்கு கேன்சர் வந்து, அவர் படும் கஷ்டங்களை பார்த்து தாங்கமுடியாமல், கேன்சர் வந்தவர்களுக்கு உதவும் ந்ல்ல எண்ணத்தில் தொடங்கப்பட்ட  ஸ்டார்ட் அப் நிறுவனம் இது. இதை தொடங்கியவர் ராஷி ஜெயின். இவர் இந்த கம்பெனியை தொடங்கும் முன்பு பயோகான் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நல்ல வேலையை உதறிவிட்டு, மக்களுக்கு உதவ வேண்டும் என்று தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் தான் இது.

உலக அளவில் 1500 கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்களையும், 500  கேன்சர் மருத்துவமனைகளையும், கேன்சர் நோயாளிகளையும் இணைக்கும்  பாலமாக இந்த ஸ்டார்ட் அப் இருக்கிறது.

ஒரு கேன்சர் நோயாளிக்கு தேவை அன்பு, ஆறுதல், சரியான மருத்துவ சிகிச்சை. நோயின் தீவிரத்தையும் தீர்வுகளையும் எடுத்துக் கூறும் வகையில் இந்த இணையதளம் இருக்கிறது

உலகமே கோரோனா பயத்தில் இருப்பதால், டாக்டர்களுடன் நோயாளிகள் டெலி கன்சல்டேஷன் செய்யும் வசதியும் இருக்கிறது. 18 நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கு இதுபோன்ற வசதிகளை செய்து தருகிறார்கள். இதுவரை ஒரு லட்சம் நோயாளிகளுக்கு மேல் இவர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.  

இவர்களின் இணையதளம் பல நோயாளிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் கேன்சர் பற்றிய சந்தேகங்களுக்கு தீர்வு தரும் இடமாகவும் இருக்கிறது. மிகவும் அழகாக  வடிவமைக்கப்பட்டுள்ள இவர்களின் இணையதளத்தை ஒவ்வொருவரும் சென்று பார்த்து இவர்களின் உதவி தேவைப்படுபவர்களுக்கு எடுத்து கூறுங்கள். தேவைப்படுபவர்கள்  பயனடையட்டும்.

இவர்களுடைய இணையதள முகவரி www.onco.com

Spread the lovely business news