பூமியில் வசிக்கும் மானிடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பால்!’ என்கின்றன வேதங்கள். இ‌தி‌ல் இரு‌ந்தே பா‌லி‌ன் மக‌த்துவ‌த்தை நா‌‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

காரைக்குடியில் மிகப் பிரபலமான ஜவுளிக் கடை “சூர்யா சில்க்ஸ்” மற்றும் “லக்ஷணா துணிக்கடை” உரிமையாளர் திரு. சரவணன் – அழகம்மை தம்பதியினர், காரைக்குடியில் முதன்முறையாக புதியதாக “லக்சுரி டைரி மில்க் ஏடிஎம் (LUCKSURY DAIRY MILK ATM) தொடங்கியுள்ளனர். அவருடன் தொலைபேசி தொடர்பில் இந்த புது முறை பால் விநியோகம் குறித்த கலந்துரையாடல் மிகவும் சுவாரஸ்யமானது. 

“Any Time Milk (ATM)” என்ற பாணியில் மேலை நாடுகளைப்போல எந்நேரமும் தரமான புத்தம் புது பசும்பால் கிடைக்க வழி வகுத்துள்ளனர். “பணம் செலுத்துங்கள் பாலை எடுத்துச் செல்லுங்கள்” என அழைக்கிறார் சரவணன்.

தூய பசும்பால் அனைத்தும் காரைக்குடியை சுற்றியுள்ள கிராமங்களின் வீடுகளில் பசுமாடு வைத்திருக்கும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இந்த ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பி வைக்கின்றனர்.  மக்கள் தங்களுக்கு தேவையான அளவு பாலுக்கான பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்தி பாத்திரத்தில் பாலை பிடித்து செல்லும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் கால விரயம் இன்றி தேவையான பால் வாங்கி செல்ல முடியும்.  

புதுமையான முறையில்,  விலை குறைவாகவும், சுத்தமாகவும், இயற்கையாக பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு, சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன. அத்தகைய  சத்துக்கள் எதுவும் நீக்காமல் எந்நேரமும் காரைக்குடி மக்களுக்கு தூய பால் கிடைக்க வழி செய்துள்ளனர். உணவு பாதுகாப்பு துறையில் (FSSAI) உரிமம் பெற்று பதிவு செய்துள்ளார்கள். 

பால் கொள்முதல் செய்த பின்னர் சத்துக்கள் நீக்காத அனைத்து பாலையும் ஃபில்டர் செய்து கலப்படத்தை (Adulteration) ஐ கண்காணிப்பதற்காக லாக்டோ மீட்டர் (Lacto Meter) கருவியை கொண்டு சரிபார்த்து, பின்னர்  கொழுப்பின் அளவை சரிபார்த்து முடிவாக இயந்திரத்தினுள் செலுத்தப்படுகின்றது. 

அரசாங்க அறிவுரையின்படி பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் விதமாக பால் வாங்க வரும் அனைவரும் பிளாஸ்டிக் தவிர்த்து  எவர்சில்வர் பாத்திரங்கள் அல்லது கண்ணாடி பாட்டில்கள் கொண்டு  வரும்படி அறிவுறுத்துகிறார்கள்.

எதிர்கால தொலை நோக்கு பார்வைப் பற்றி  கேட்கையில் “வானமே எல்லை” என்றார். “வானம் தொட்டுவிடும் தூரம்தான்”  என்ற எனது பதிலுடன் வாழ்த்துக்கள் பரிமாறி விடைபெற்றோம்.

தொடர்புக்கு : 97866 74001 / 99437 45002

Spread the lovely business news