ஒரு காலத்தில் கடைக்கு  சென்று துணி வாங்கி, நம் அளவைக் கொடுத்து பண்டிகைக்கு டெய்லர் தைத்து தருவாரா? மாட்டாரா? என்ற ஏக்கத்துடன் தினசரி அவர் கடைக்கு சென்று பார்த்து அவரைக் “கஷ்டப்படுத்தி” சட்டை, பேண்டை தைத்து வாங்கி வருவோம். சில சமயம் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பு தைக்கக் கொடுத்த  துணியைக் கூட அவர் நாம் பலமுறை நினைவு படுத்திய பின்னர் தான் தைக்கவே ஆரம்பிப்பார். நமக்கு டென்ஷன் ஏறி விடும். அப்படி இருந்த காலம் போய், ரெடிமேட்  வர ஆரம்பித்துவிட்டன. பெரும்பாலான டெய்லர் கடைகள் காணாமல் போய்விட்டன. டெய்லர்கள்  ரெடிமேட் துணிகள் தயாரிக்கும் கம்பெனிகளில் வேலைக்கு சென்று விட்டார்கள்.

 சில சமயம் உங்களுக்கு ஒரு ஏக்கம் வரலாம்…நம்முடைய டிஸைனை நாம் ஏன் நமது டி சர்ட்டில் போடக் கூடாது, நாமே ஏதாவது டிசைனை செலக்ட் செய்து  அதை ஏன் துணியில்  பிரிண்ட் செய்து வாங்கக்கூடாது. இவையெல்லாம் தற்போது நடைமுறை சாத்தியமாகி விட்டது. புதிய புதிய ஸ்டார்ட் அப்-கள் வந்து விட்டன. நாம் என்ன நினைக்கிறோமோ அதையெல்லாம் செய்து தர புதிய கம்பெனிகள் வந்து விட்டன.

2008 ம் வருடம் டேவிஸ், ஸ்டீபன் இவர்களால் துவங்கப்பட்ட கம்பெனி தான் ஸ்பூன்ப்ளவர் என்பது. இது இன்று வளர்ந்து பெரிய அளவில் இருக்கிறது. இவர்களின் வேலை என்ன தெரியுமா? புதிய புதிய டிசைன்களை உலகத்திற்கு கொடுத்து கொண்டிருப்பது. அதை உருவாக்குபவர்களை உலகத்திற்கு எடுத்து காண்பிப்பது.

இவர்களிடம் அதிகம் இருப்பது வீட்டு உபயோகத்திற்கான பேப்ரிக்ஸ் – கர்ட்டன்ஸ், குவில்ச், கிளாத், பைகள், பர்னீச்சர் பேப்ரிக், பொம்மை, தலையணைக்கான துணிகள். டிசர்ட் களும் இவர்களிடம் இருக்கிறது.

இவர்கள் பிரிண்ட் செய்ய டிஜிட்டல் டெக்னாலஜியை உபயோகிக்கிறார்கள். மேலும், சுற்றுப்புற சூழ்நிலையைக் கெடுக்காத பிக்மெண்ட் இங்க்ஸ் மற்றும் டைஸ் உபயோகிக்கிறார்கள்.

இவர்களிடம் 35000 டிசைன்களுக்கு மேல் இருக்கிறது. இவர்களுக்கு நீங்கள் டிசைனும் செய்து கொடுக்கலாம். நீங்கள் நல்ல டிசைனராக இருக்கும் பட்சத்தில் உங்கள் டிசைன்களை இவர்களிடம் விற்கலாம்.

அமெரிக்காவின் 5000 சிறந்த ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக இவர்கள் கம்பெனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்காவில் வேலை பார்க்க சிறந்த கம்பெனிகளில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இவர்களின் இணையதளம் www.spoonflower.com  இவர்களிடம் இருக்கும் டிசைன்களை பார்க்கும் போது உங்களுக்கும் பல ஐடியாக்கள் கிடைக்கலாம்.

Spread the lovely business news