தமிழகத்தின் மான்செஸ்டர் நகரம் என பெருமையுடன் அழைக்கப்படும் கோயம்புத்தூரில்,  சர்வதேச விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கேமியோ பம்புகள் மற்றும் மோட்டார்ஸ் (CAMEIO Pumps and Motors) ஒரு பிரபலமான உலகத் தரம் வாய்ந்த பிராண்ட்.  இது “ஆர்கோ ஆட்டோமேஷன்” என்ற பதிவு செய்யப்பட்ட பெயரில் தயாரிக்கப்படுகிறது.

27 வயதுள்ள இளம் முதன்மை செயல் அதிகாரி (CEO)  திரு. விக்னேஷ் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அப்பா, அம்மா, மகன் என மும்மூர்த்திகளாக  இருந்து நிர்வகிக்கும் இந்நிறுவனம் 2015 ல் தொடங்கியது. 

படித்து முடித்த பின்னர் எதை தொடங்குவது என்ன செய்வது என குழம்பும் இளைஞர்களுக்கு மத்தியில், விக்னேஷ் படிக்கத் தொடங்கும் முன்பே, தான் என்ன தொழிலை தொடங்க வேண்டும் என அப்பா  திரு. வேலுமணி (நிர்வாக இயக்குனர்) அவர்களிடம்  கலந்து ஆலோசனை செய்து, அதற்கு ஏற்றபடி,  பி. டெக்., எலக்டிரிக்கல் & எலக்டிரானிக்ஸ் படித்து பட்டம் பெற்று, தொடங்கியதுதான் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம். 

0.5 HP யில் தொடங்கி 2 HP வரை திறன் கொண்ட பம்புகள், மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக செல்ப் பிரைமிங், ஷாலோ வெல், ஜெட் ஓபன் வெல், சென்ட்ரிபுகல் மற்றும் மேஜிக் சக்‌ஷன் போன்றவை. 

அதிநவீன உற்பத்தி வசதியுடன், அனுபவமுள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்படும் இவர்களின்  பம்புகள், மோட்டார்களுக்கு மகாராஷ்ட்ராவில் அதிக வரவேற்பு இருப்பதால் புனேயிலும் ஒரு  கிளை தொடங்கி  இருக்கிறார்கள்.  

இவர்களின்  பம்புகள் மற்றும் மோட்டார்கள் அனைத்தும்,  விற்பனைக்கு வெளியே அனுப்பும் முன், ஹைட்ரோ-நியூமேடிக் அசெம்பிளி லைன் முறையிலும் கணினிமயமாக்கப்பட்ட சோதனை முறையிலும் தரக்கட்டுப்படு பிரிவினர் சோதனை செய்கின்றனர். அதுமட்டுமின்றி, எல்லா உபகரணங்களும் துல்லியமாகவும் நல்ல செயல்திறனுக்காகவும்  CAD மூலம் வடிவமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.    

“எங்களின் நிலையான விடாமுயற்சியும், உறுதியும், எங்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவும் சேர்ந்து இன்று எங்கள் நிறுவனம் உலகளவில் புகழ் பெற்றதாக இருக்கிறது. எங்கள் உற்பத்திகளை விரைவில் வளைகுடா நாடுகளுக்கும் நேபாளத்துக்கும் ஏற்றுமதி செய்ய இருக்கிறோம்’’ என மகிழ்வுடன் தெரிவித்தார் திரு.  விக்னேஷ்.  அவருக்கு வாழ்த்து கூறி விடைபெற்றோம்.  

தொடர்புக்கு :  99448 45467 / www.aarcogroup.com

Spread the lovely business news