இன்று  சிறிய அளவில் பிசினஸ் செய்கிறவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால், யார் யாருக்கு என்னென்ன கடன்கள் கொடுத்திருக்கிறோம் என்பதை குறித்து வைத்து கொள்வதுதான்.  விற்கும் போது சின்ன சின்ன துண்டு சீட்டில் எழுதி வைத்துவிட்டு அப்படியே மறந்து விடுவது வழக்கம். பின்னர் அந்த பணத்தில் பாதி வராமல் போய்விடும்.  

மனுஷனுடைய ஞாபகசக்திக்கு ஆயுள் மிகவும் குறைவான காலம் (memory is short) என்பதுதான் உண்மை. நமக்கெல்லாம் யானை மாதிரி ஞாபக சக்தி இருப்பது கஷ்டம். 

இந்தியாவில் எம்எஸ்எம்இ கம்பெனிகள்  கிட்டத்தட்ட ஆறு கோடி  இருக்கிறது.  இந்த ஆறு கோடி கம்பெனிகள் பெரிய அளவில் கம்ப்யூட்டர் உபயோகிப்பது இல்லை. 

இந்த சிறிய வியாபாரிகளுக்கு இருக்கும் இந்த சிரமத்தை  போக்க  ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி கட்டாபுக் (www.khatabook.com)  என்ற   ஒரு செயலி தயார் செய்து  இருக்கிறார்கள்.  இந்த கட்டாபுக் செயலியில் சிறு வியாபாரிகள்  தங்களுடைய டிஜிட்டல் லெட்ஜரை வைச்சுக்கலாம். இந்த வகையில் அவர்களுக்கு உதவும் விதமாக இந்த செயலி இருக்கிறது.  

அதாவது ஒரு மளிகை கடைக்காரர் யார் யாருக்கு கடன் கொடுத்து இருக்கிறார் என்பதை அவருடைய லெட்ஜரில்  குறித்து வைத்து கொள்ள முடியும்.  இந்த  செயலியை அறிமுகப்படுத்தியதும்  உடனடியாக ஒரு கோடி மக்கள் அதை டவுன்லோட் செய்து  இருக்கிறார்கள்.  

  உதாரணமாக ஒரு மளிகை கடைகாரருக்கு மாதம் 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை அவருடைய வாடிக்கையாளர்களிடமிருந்து  வர வேண்டி இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அவரின்  வாடிக்கையாளர்கள் 600 பேர் என்று எடுத்துக்கொண்டால், அவரால் அந்த கணக்கு வழக்குகளை சமாளிப்பது மிகவும் கடினம்.  இந்த கட்டாபுக் செயலியில் அனைத்தையும் பதிந்து வைப்பதன் மூலம்  அவருடைய மளிகைக் கடையின் டிஜிட்டல் லெட்ஜரை மேனேஜ் செய்ய முடிகிறது. அவருக்கு  வரவேண்டிய நிலுவை தொகைகள் முறையாக வசூலாக வழி வகுக்கிறது. 

இதில்  நீங்கள் பதிந்து வைத்த  உங்களுக்கு வர வேண்டிய கடன்கள்,  நீங்கள் திரும்ப கொடுக்க வேண்டிய கடன்கள் குறித்து அந்த குறிப்பிட்ட தேதிக்கு ரிமைண்டர் அனுப்புகிறது. 

  சென்று பாருங்கள் உங்களுக்கு உபயோகமான செயலி ஆகும். www.khatabook.com

Spread the lovely business news