ஷாப்பிங் மால்களின் முக்கிய அம்சமே விண்டோ ஷாப்பிங்தான். அதாவது மாலுக்கு போய், அங்கிருக்கும் எல்லாவற்றையும் பார்க்கலாம், வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தரம் நன்றாகவும்,  விலை  குறைவாகவும் டிஸ்கவுண்ட்  அதிகமாகவும் யார் தருகிறார்களோ அங்கு   பார்த்து வாங்கலாம்.

அது போல உங்களுக்கு கடன்கள் வாங்கும் போது முன் பின் தெரியாத ஒரு வங்கியில் அல்லது நிதி நிறுவனத்திடம் போய் விழ வேண்டாம். யார் குறைவான வட்டியில் தருகிறார்கள் என்று ஒப்பிட்டு  பார்த்து விட்டு வாங்க பல இணையதளங்கள் வந்து விட்டன. அதில் முக்கியமான இணைய தளங்களில் ஒன்று “மை லோன் கேர்” (myloandcare.in).

மை லோன் கேர் என்ற கம்பெனி இந்தியாவின் பெரிய ஆன்லைன் மார்க்கெட் பிளேஸ் ஆகும்.

இந்த இணையதளத்தில் உங்களுக்கு என்ன லோன் தேவை என்று கூறிவிட்டால் உங்கள் தகுதிக்கு ஏற்ப எந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்களுக்கு ஒத்து வரும் என்று கூறி அதிலிருந்து கடன்கள் வாங்க உதவி செய்கிறார்கள்.

புது வீட்டுக்  கடன், வீட்டு அடமானக்  கடன், வாகனக் கடன், கோல்டு லோன், பிசினஸ் லோன், கிரிடிட் கார்டு, பர்சனல் லோன் ஆகியவைகள் வாங்குவதற்கு இந்த இணையதளம் உதவி செய்கிறது.

இவர்களிடம் 20 லட்சம் பதிவு செய்த  உபயோகிப்பாளர்கள் இருக்கிறார்கள். 25 வங்கிகளிடம் பார்ட்னர் பேங்க் அரேஞ்ச்மெண்ட் வைத்துள்ளார்கள். ஆன்லைன்               மூலமாகத்தான் விண்ணபிக்க வேண்டும். இவர்கள் இந்தியாவில் 1100 ஊர்களில் உங்களுக்கு கடன்கள் கிடைக்க வழி வகை செய்கிறார்கள். நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்த பிறகு நீங்கள் கடன் பெறத்  தகுதியானவர்  என்றால் அவர்கள் கம்பெனியிலிருந்து உங்களை கூப்பிட்டு வேறு தேவையான டாக்குமெண்ட்களை கேட்பார்கள்.

இதுவரை 30,000 பேருக்கு கடன்கள் வாங்க உதவியுள்ளார்கள்.

உங்களுக்கு  லோன் தேவை இருக்கும் பட்சத்தில், இவர்களின் இணையதளத்தில் சென்று உங்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் கடன் வாங்க தகுதியானவரா என்று பார்ப்பார்கள். அப்படி தகுதி உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் அவர்கள் பார்டனர் வங்கிகள் மூலமாக கடன் பெற்று தர ஏற்பாடு செய்வார்கள்.இவர்களுடைய இணையதளம் www.myloancare.in

Spread the lovely business news