தொழில் தொடங்குவதற்கு ஆசை இருந்தும் அனுபவம் இல்லை என்று அஞ்சுபவர்களுக்கு ஏற்ற தொழில் பிரான்சைஸி என்று சொல்லப்படும் உரிமை வணிகம். ஒரு பிராண்ட், வணிகத் திட்டம் மற்றும் நிபுணத்துவத்தை இந்த மாடலில் கொடுப்பதன் மூலம் வணிக உரிமையாளர்களும், நிறுவனங்களும் லாபத்தை அதிகரிக்கலாம். உலகின் பல்வேறு இடங்களிலும் கிளைகளை அமைத்து பொருளாதார ரீதியாக ஏற்படும் ரிஸ்க்குகளை தவிர்க்கலாம்.

இதில் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் உள்ளனர் -ஒருவருடைய வழங்குபவர் இன்னொருவர் உரிமத்தை பெறுபவர்.  FRANCHISER -பிராண்டின் உரிமையாளர் தனது பிராண்டையும் அந்த வணிகத்தில் உள்ள தனது நிபுணத்துவத்தையும்  ஒப்பந்த அடிப்படையில்  விற்கிறார். இதை வாங்கும் உரிமையாளர் வணிகத்தை குறிப்பிட்ட இடத்தில் நிறுவி நிர்வாகம் செய்கிறார். இதனால் இருவரும் லாபத்தை அடையலாம். பிராண்டின் விசுவாசமான வாடிக்கையாளர்கள்,  பிராண்டின் உரிமையாளரின் ஆக்கபூர்வமான ஆதரவு, சட்ட ஆலோசனை உரிமை, பெறுவோரின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி ஆகியவற்றை பெற்றவுடன் புதிய சந்தைகளில் வணிகத்தை மேலும் விரிவாக்க முடியும். இதன் மூலம் பிராண்டிற்கான சந்தைப் பங்கு அதிகரிப்பதோடு வருவாயும் அதிகரிக்கும்

பெரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் தொழிலில் ஆர்வமும்   முயற்சியும் இருந்தால் போதும் பிரான்சைஸிங் கைகொடுக்கும். 

அமெரிக்காவில்  சியாட்டில் நகரில் 1970 களில் ஒற்றை கடையுடன் ஆரம்பித்த ஸ்டார்பக்ஸ் பிரான்சைஸ் தொழிலுக்கு ஒரு வெற்றிகரமான மாடல் என சொல்லலாம் . இப்போது 70 நாடுகளில் 30,000 கடைகளை வைத்திருக்கிறது. இந்தியாவில் இந்த பிராண்டை டாடா நிறுவனம் எடுத்து நடத்துகிறது.

மெக்டொனால்ட் நிறுவனத்தின் துரித உணவு விற்பனை நிலையங்கள், ஹையாட் சொகுசு ஓட்டல் சங்கிலி, KFC  போன்ற பிரபலமான நிறுவனங்கள் இந்த பிரான்சைஸி எனும் உரிமம் வழங்கும் முறையை பின்பற்றுகின்றனர்

முதலீட்டாளர்கள் தங்கள் தேர்ந்தெடுக்க விற்கும் வணிகத்தை பற்றிய முழு விவரங்களை சேகரித்து கொண்டு அவர்களது வணிகர்களையும் நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். இதுவும் கிட்டத்தட்ட ஒரு திருமணம் போன்றதுதான்.

63 பிரான்சைஸ் தொழிலுக்கு பெருமளவில் முதலீடு தேவை என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இது ஒரு லாபகரமான மற்றும் சாத்தியமானவணிக முறையாகும். முதலில் உரிமையை எவ்வாறு பெறுவது என்பதை தெரிந்து கொண்டால் போதும் ஒரு லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை,தேர்ந்தெடுக்கப்படும் வணிகத்தை பொறுத்து உரிமத்திற்கான தொகைகள் வேறுபடும்.

உரிமையாளர் வணிகம் உரிம பிராண்டுகள்
கொரியர் சர்வீஸ்MANY BRANDS ARE THERE
ஆரம்பப் பள்ளிகள்WoW, TIME KIDS
ரோல்ஸ்Kathi Express
சலூன்Louis Unisex Salon, Studio99
ஐஸ்க்ரீம்AMUL, POLAR BEAR, ARUN 
மருந்தகங்கள்APPOLO ,
கோழி இறைச்சிSUGUNA, VENKY
துரித உணவகம்GOLI VADAPAV, SUBWAY,McDONALD

இதைத்தவிர லென்ஸ்கர்ட், ஸ்பெக்ஸ்மேக்கர்ஸ், தனிஷ்க், கோல்டு பிளஸ் ரெடிமேட் ஆடைகள் வழங்கும் பீட்டர் இங்கிலாந்து, கலர் பிளஸ் என சொல்லிக் கொண்டே போகலாம். தேர்ந்தெடுக்கப்படும் தொழிலுக்கு ஏற்றவாறு இடவசதி, ஜன நெருக்கம் இருக்கிற கடைவீதிகள், பார்க்கிங் வசதி என்ற முக்கிய அம்சங்களை தொழில் தொடங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டும்.  முதலில்  இவையெல்லாம் இருந்தால்தான் பிராண்டின் உரிமையாளர் உரிமம் வழங்குவது பற்றி யோசிப்பார். தயாரித்து வழங்கும் பொருட்களில் எந்த மாறுதலும் செய்ய முடியாது. மாதந்தோறும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெறும் வியாபாரத்திற்கு தகுந்த வகையில் ராயல்டி தொகையை உரிமத்தை வழங்கிய நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். சில குறிப்பிட்ட நிறுவனங்கள் கடைகளின் அமைப்பு லேஅவுட்,  சுவர்களின் வண்ணம் முதலிலிருந்து உள் அலங்காரம், ஊழியர்களின் உடை, வாடிக்கையாளர் உட்காரும் இருக்கைகள்  வரை  பிரான்சைஸி குறிப்பிடும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இருந்தபோதிலும் தினசரி வியாபாரத்தில் எந்தவித தலையீடும் இருக்காது. வணிகம் நடத்த வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள், போதிய அனுபவம் இல்லை என்று  பயப்படாமல் மினிமம் கேரன்டி என்ற குறைந்தபட்ச லாபத்தை கணக்கில்கொண்டு ஆரம்பிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பு பிரான்சைஸிங். 

உரிமத்தை வாங்கும்போதும் விற்கும்போதும் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் அல்லது ஆலோசகர்களின் உதவியை பயன்படுத்தவும். மற்ற தொழிலைப் போலவே, சரியான பொருள் அல்லது சேவையை பற்றிய தெளிவான புரிதலுடன், இணைந்து பணிபுரிவதுமே இந்தத் தொழிலிலும் வெற்றிக்கான திறவுகோல்!

Spread the lovely business news