இப்போது எங்கு சென்றாலும் உங்களின்‌ கையடக்கமான மொபைல் போனில்பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை ஓரிடத்தில்   பார்க்க         முடியும் படிக்க முடியும் என்ற நிலை  வந்துவிட்டது. முன்பெல்லாம் ஊருக்கு போறோம்ன்னா நாம் எடுத்து            வைக்கிற  சாமான்களுடன் நான்கு புத்தகங்களும் கூடவே        இருக்கும்.                 புத்தகங்கள்     துணை இல்லாமல் பலர் வெளியூர் செல்லவே மாட்டார்கள் தற்போது பலருக்கு படிக்கும் பழக்கமே மறந்துவிட்டது. மேலும் புத்தகங்களை எடுத்துச் செல்வது சிரமமாக இருப்பதால்,  புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை      இனிமையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பல            வருடங்களுக்கு முன்பு கிண்டில் ரீடர் வந்தது.  கையடக்க பதிப்பு போல, கையடக்க ரீடர்.      

பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை தன்னகத்தே கொண்டு உனக்கு வேண்டியவற்றை எடுத்து படி என்று ஆவலைத் தூண்டுகிறது.  இது போல பல ரீடர்கள் வந்துவிட்டாலும், தற்போது     சந்தைக்கு புதிதாக வந்திருப்பது ஏர்டெல்   புக்ஸ் (Airtel Books). இதில் என்ன புதிய அம்சம் என்றால், இதை தனியாக      கிண்டில்ரீடர் போல  எடுத்துச் செல்ல வேண்டாம்.  உங்களிடம் தற்போது            இருக்கும் மொபைலில் இந்த செயலியை        நிறுவிக் கொள்ளலாம்.  இதன் மூலம் பல ஆங்கிலம் மற்றும் இந்தி            புத்தகங்களை படிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் புத்தகம் படிப்பதற்க்கும் டவுன்லோட் செய்வதற்க்கும்  சிறிது பணம் கட்ட வேண்டியிருக்கும்                 என்பதை நினைவில் கொள்ளவும்.  பயணத்தில் தனிமை என்ற பயம் இனி வேண்டாம்.  உங்களுடன் புத்தகங்களும்                      பயணிக்கிறது என்பது  ஒரு இனிமையான அனுபவம். புத்தகப்பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே  ஒரு லட்சம் டவுண்லோட் கள் செய்யப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.

ப்ளே ஸ்டோரில் சென்று Airtel Books யை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Spread the lovely business news