உங்களிடம் ஒரு நல்ல ஐடியா இருக்கிறது, அதை ஒரு வணிக வடிவமாக மாற்ற விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு யார் உதவுவார்கள் என்ற        எண்ணம் தான் முதலில் வரும். அப்படிப்பட்ட எண்ணம் வரும் போது, உங்களுக்கு முதலில் நினைவுக்கு வரவேண்டியது அரசாங்கத்தின் இணையதளமான ஸ்டார்ட்-அப் இந்தியா (Startup India) தான்.

இதில் உங்களைப் போல ஒரே  எண்ணமுடைய ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் பார்வையிடலாம். அது உங்களுடைய எண்ணங்களை பல கோணங்களில் விரிவுபடுத்தும்.

இதுவரை இந்த இணையதளத்தில் 78617 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்து வைத்துள்ளார்கள். இதில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 4220 கம்பெனிகள் தங்களது விபரங்களை பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக ஆரம்பிக்கப்பட உங்கள் கம்பெனிக்கு இன்குபேட்டர் வசதிகள் கட்டாயம் தேவை. 546 இன்குபேட்டர் பற்றிய தகவல்கள் இந்த இணையதளத்தில் இருக்கின்றது.

அது போல அக்லிரேட்டர்களாக இருக்கும் 118 கம்பெனிகளின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

உங்களது கம்பெனி பெரிய அளவில் மேலே வர மெண்டர்கள் அவசியம். அந்த வகையில் பல துறை வல்லுநர்கள் மெண்டராக இருக்கிறார்கள். அவர்களில் 562 பேர் பற்றிய தகவல்கள் இந்த அரசாங்க இணையதளத்தில் இருக்கின்றது.

எந்த ஒரு புதிய கம்பெனிக்கும் நிதி மிகக் கட்டாயம் தேவை.  76 இன்வஸ்டர்கள் தங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்கள். அவர்களின் விபரங்களும் உங்களுக்கு இதன் மூலம் கிடைக்கும்.

இணையதள விபரம் – www.startupindia.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அதில் Network  என்ற பகுதியை பார்க்கவும்.

Spread the lovely business news