அமேசான் மூலமாக இந்தியாவில் இருந்துகொண்டே வெளிநாடுகளில் பொருட்களை விற்கலாம் என்று முன்பே பார்த்திருக்கிறோம்.  இந்த வகையில் இந்தியாவில் இருந்து கொண்டே பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனைச் செய்வது 2015ம் ஆண்டு அமேசான் கம்பெனியால்  தொடங்கப்பட்டது. இதுவரையில் சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை (சுமார் 7000 கோடி ரூபாய்) இந்திய கம்பெனிகள் வெளிநாடுகளில் ஆன்லைன் மூலமாக விற்றுள்ளன. 

2025ம் ஆண்டிற்குள் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை (சுமார் 70000 கோடி ரூபாய்)   இந்தியாவிலிருந்து ஆன்லைன் மூலமாக பல நாடுகளிலும் விற்பனை செய்ய அமேசான் முடிவு செய்துள்ளது. 

தற்போது அமேசானில் 60000 இந்திய விற்பனையாளர்கள் வெளிநாடுகளில் பொருட்களை விற்க தங்களைப் பதிவு செய்துள்ளார்கள். இந்தியாவில் சுமார் 6 கோடிக்கு அதிகமான சிறிய மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் இருப்பதால்  அவர்களும் தங்களுடைய இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு அவர்களுடைய  விற்பனைகளைப் பெருக்க வேண்டும் என்பதே எண்ணம் என அமேசான் இந்தியா கூறுகிறது. 

இந்தியாவில் இருந்து ஆன்லைன் மூலமாக வெளிநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் பொருட்கள் என்ன தெரியுமா? டெக்ஸ்டைல்,  ஆயுர்வேதிக் அழகுப் பொருட்கள்,  வீட்டு உபயோகப் பொருட்கள்,  காலணிகள் ஆகியவை ஆகும்.

நீங்களும் ஏன் உங்கள் பொருட்களை அமேசான் இந்தியா மூலம் உலகின் பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்லக்கூடாது?https://services.amazon.in/services/amazon-global-selling/help.html

Spread the lovely business news