உலகமே ரூம் போட்டு யோசித்து கொண்டிருப்பது கொரோனாவை எப்படி ஒழிப்பது அல்லது படிப்படியாக குறைப்பது என்பதுதான். பெங்களூரை சேர்ந்த விஞ்ஞானி ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். ட்ரம் வடிவில் இருக்கும் அந்த கருவிக்கு ஷைக்கோகேன் (Shycocan) என்று பெயரிட்டுள்ளது. கரோனா வைரஸில் பரவியிருக்கும் ஸ்பைக் புரோட்டீனை நடுநிலையாக்குவதில் இந்த கருவி பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஸ்பைக் புரோட்டீனை நடுநிலையாக்குவதால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடிகிறது. கொரோனா வைரஸ் உள்ள ஒருவர் தும்மும்போதும், இருமும் போதும் பரவும் வைரஸ் கிருமிகளை பெருமளவில் இந்த கருவி கட்டுப்படுத்துகிறது. இந்தக் கருவியை அமெரிக்காவிலுள்ள யுஎஸ் எப்.டி.ஏ., யூரோப்பியன் யூனியன் ஆகியவை அங்கீரித்துள்ளன. இந்த கருவியிலிருந்து வெளியேற்றப்படும் எலக்ட்ரான் கதிர்கள் சுமார் 99.6 சதவிகிதம் கொரோனா வைரஸ் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டவை. விரைவில் அமெரிக்காவில் முதலில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். 

மேலும் விபரங்களுக்கு  :  www.shreis.org

Spread the lovely business news
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •