இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் கம்பெனிகள் பெருக வேண்டும். அப்போதுதான் நாடு செழிப்படையும். இதை கருத்தில் கொண்டு பல விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் கம்பெனிகள் இப்போது உருவாகியுள்ளன.

விற்பனை செய்வதுதான் விவசாயிகளுக்கு உள்ள முக்கிய  பிரச்சனையே !

விவசாயிகளின் முக்கியமான பிரச்சனை, அவர்களின் விளைபொருட்களுக்கு குறைவான பணம் கிடைப்பது, இரண்டாவது விளைபொருட்களை விற்க முடியாமல் தவிப்பது, மூன்றாவது விற்ற பொருட்களுக்கான பணம்  மிகவும் தாமதமாக கிடைப்பது. இதற்கு முக்கியமான காரணம் இடைத்தரகர்கள்தான். இவர்களை தவிர்க்கும் வகையில் பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இப்போது வந்துள்ளன. 

விவசாயிகளை இவர்களே நேரடியாக தொடர்புகொண்டு, பழங்கள், காய்கறிகளை வாங்கி சில்லறை விற்பனையாளர்களிடம் விற்கின்றனர். இந்தியாவின் பல ஊர்களில் இருந்தும் பழங்கள், காய்கறிகளை வாங்கி பெங்களூர், சென்னை, ஹைதராபாத், டெல்லி, புனே, மும்பை போன்ற நகரங்களில் உள்ள சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். 12மணி நேரத்தில் இந்த சரக்குகள் சில்லறை விற்பனையாளரை அடைவதால், உபயோகப்பாளர்களுக்கு பழங்கள், காய்கறிகள் பிரஷாக கிடைக்கிறது. இந்த வகையில் இரண்டு ஸ்டார்ட்அப் கம்பெனிகளை முக்கியமாக குறிப்பிடலாம், ஒன்று பெங்களூரைச் சேர்ந்த நிஞ்சா கார்ட் (Ninja Cart), இன்னொன்று  சென்னையை சேர்ந்த வே கூல் (Way Cool). 

பூச்சி மருந்துகள், உரங்கள் ஸ்டார்ட் அப்

இதுதவிர விவசாயிகளுக்கு தரமான பூச்சி மருந்துகள், உரங்கள், விதைகள், விவசாய கருவிகள் ஆகியவை கிடைப்பது மிகவும் முக்கியம். இந்தத் துறையில் புனேயைச் சேர்ந்த அக்ரோ ஸ்டார் (Agro Star), இந்தூரைச் சேர்ந்த கிராமபோன் (Gramophone), ஹைதராபாத்தைச் சேர்ந்த கீத்தி நெக்ஸ்ட் (Khethinext) ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. இந்த ஸ்டார்ட் அப் கம்பெனிகள் விற்பனை மட்டும் செய்யாமல் விவசாயிகளுக்கு, விவசாய விளை பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்றும் கற்றுக்கொடுக்கின்றன.

இந்த ஸ்டார்ட்அப் கம்பெனிகள் இப்போது, ஊரிலிருக்கும் விற்பனையாளர்களுடன் போட்டி போடுகின்றன. இது போன்ற போட்டியால் விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை விலை குறைவாக தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

என்ன பயிரிடலாம்?

விவசாயிகளின் விளை நிலங்களை ஆராய்ந்து அங்கே எதைப் பயிரிட்டால் அவர்களுக்கு லாபகரமாக இருக்கும் என்று கூறுவதற்கு பல ஸ்டார்ட் கம்பெனிகள் இப்போது வந்துள்ளன. அவற்றில் முக்கியமானது டிஜி அக்ரி (DigiAgri). இதுபோல பாட்னாவைச் சேர்ந்த தி ஹாத் (DeHaat) என்ற கம்பெனியும் பெரிய பங்காற்றி வருகிறது. 

Spread the lovely business news
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •