பாட்டி தனது பேரனின் நலனில் அக்கறைக் கொண்டு  முளைக் கட்டிய தானியங்களால் சத்து மாவு தயார் செய்து அதில் நல்ல பலன்   தெரிந்ததால் அதையே வியாபாரமாக திண்டுக்கல்லில் தொடங்கியதுதான்  ஆர்க்வில்லே (Orgville). இது ஒரு  குடும்ப நிறுவனம். இதன் நிறுவனர்களில் ஒருவரான திரு.  முகமது அனீஸ் அவர்களிடம் பேசியபோது பல புது விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.  இவர் ஐ.ஐ.டி. யில் பயோகெமிஸ்ட்ரி இஞ்ஜீனியரிங் (IIT-BIOCHEMISTRY ) முடித்து அதன் மூலம் கிடைத்த அறிவையும் அனுபவத்தையும் தனது நிறுவனத்தில் பயன்படுத்தி  வருகிறார்.

சாதாரண சத்து மாவு கொடுக்க பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால் முளைக்கட்டிய தானியங்களை பயன்படுத்தி செய்வது சந்தையில் அதிகமில்லை. இது பன்மடங்கு சத்தானது. இவர்களின் முளைக்கட்டிய சத்து மாவை சப்பாத்தி,  புரோட்டா மாவில் சேர்த்து பிசைந்து சமைக்கலாம். சாதா சப்பாத்தி சத்தான சப்பாத்தியாக மாறும். இதை  ஸ்ப்ரௌட்டிக்ஸ் (Sproutix) என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்து வருகின்றனர். 

சத்துமாவு குறித்து பழைய  தலைமுறைக்கு இருந்த  விழிப்புணர்வு  புது  தலைமுறைக்கு இல்லை என வருந்தினார்.  சாதாரணமாக உள்ள தானியங்களில் இருக்கும் சத்தைவிட  முளைக்கட்டிய தானியங்களில் கூடுதலாக இருக்கும்.

இதில் 24 விதமான கொட்டைகள், தானியங்கள், பயிறு வகைகள் சிறுதானியம், நவதானியம் சேர்க்கப்படுகின்றன. அதில் 15 தானியங்கள் முளை கட்ட முடியும். அரிசி போன்றவை முளை கட்ட முடியாது.  ஒவ்வொரு தானியத்திற்கும் வெவ்வேறு விதமான பக்குவத்தில் முளை கட்ட வேண்டும்.  சில துணிகளில் கட்டிவைத்தும்,  சில மண் பாத்திரங்களில் வைத்தும் பக்குவப் படுத்தவேண்டும்.

தானியங்கள் முளைக் கட்டும்போது முளைவேர் வெளியே வரும் சமயத்தில் அதில் ஒரு வித  என்ஸைன்ஸ் சுரக்கும், அது தானியத்தில்  பயன்படாமல் அடங்கி இருக்கும் சத்துக்கள், மினரல்ஸ், வைட்டமின்ஸ் போன்றவற்றை  நமக்கு பயன்படக் கூடிய சத்துப் பொருளாக மாற்றியும், நச்சுத்தன்மையை  வெளியே கொண்டும் வந்துவிடும்.  இதற்கு கூடுதல் சிரத்தையும்  உழைப்பும் தேவைப்படும்.

ஆரம்பத்தில் முளைக்கட்டிய சத்தான சத்துமாவு செய்து அதை சில்லறை கடைகளுக்கும்,  பார்மசிகளுக்கும் விநியோகம் செய்து  நல்ல அளவில் வரவேற்பு இருந்ததால் பின்னர் சத்துமாவு லட்டுகள் விற்பனைக்கு இறக்கினோம். தனது வீட்டில் உருக்கிய நெய், வெல்லம், பாதம், முந்திரி போன்றவற்றை பயன்படுத்தி செய்வதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு. இந்த சத்தான லட்டு உருண்டைகள் உடைந்து போகாமலிருக்க  ஏற்றுமதி செய்யக் கூடிய தரத்தில் பேக்கிங் செய்து உள்நாட்டிலேயே விற்பனை செய்கிறோம்.  

அனைத்தும் ஆர்கானிக் (இயற்கை) முறையிலேயே தயாரிக்கப்படுகிறது.  எந்த ஒரு ரசாயனமும்,  செயற்கை சர்க்கரையும் கலப்பதில்லை.  

திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆர்கானிக் முறையில் பயிரிடும் விவசாயிகள் மூலம் மட்டுமே இவர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் வாங்குகிறார்கள்.  சாதாரண விவசாய நிலத்தை ஆர்கானிக் நிலமாக மாற்றுவது சுலபமான வேலை அல்ல. அதுவும் குறிப்பாக ஒரு சில ஏக்கர் பரப்பளவில் மட்டும் மாற்றினால் ஏற்புடையதல்ல.  சுற்றுவட்டாரத்தில் குறைந்தது நாலைந்து கிராமங்களை மாற்ற வேண்டி வரும்.  இதைத்தான் ஆர்கானிக் பண்ணை என்று அழைக்கப்படுகிறது

சாதாரண சத்துமாவுக்கும் முளைக்கட்டிய சத்துமாவுக்கும்  விலை வித்தியாசம் அதிகமில்லை.  ஆர்கானிக் பொருட்களை செல்வந்தர்கள் தான் வாங்க முடியும் என ஒரு தப்பான கருத்து உள்ளது.  முறையாக ஆர்கானிக் முறையில் தயார் செய்யப்பட்ட பொருள்கள் அந்த அளவுக்கு விலை வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை.  

விவசாயிகள் ஆர்கானிக் முறையில்தான் பயிரிடுகிறார்கள் என்பதை எப்படி ஊர்ஜிதம் செய்து கொள்வது என்ற எங்களின் சந்தேகத்திற்கு பதில் அளிக்கையில்,  அதற்கென ஆர்கானிக் இந்தியா ஆர்கனிசேஷன் (Organic India Organization) போன்ற பல லேப்கள் இருக்கின்றன. அவை மண் பரிசோதனை, பயிர் பரிசோதனை,  பயிர் பாதுகாப்பு போன்ற பலவித சோதனைக்கு உட்படுத்தி அதன் உண்மை தன்மை குறித்து  சான்றிதழ் வழங்குவார்கள்.  

குறிப்பாக எங்களின் தயாரிப்புகள் ஆர்கானிக் தானா என்பதற்க்கு  நாங்கள் மூலப்பொருட்கள் வாங்கும் விவசாய நிலங்களை பரிசோதனை செய்த பின்னர் முளைக்கட்டிய சத்துமாவு போன்றவற்றை பரிசோதனை செய்து இது ஆர்கானிக் முறையில் தயார் செய்யப்பட்டது என சான்றிதழ் கொடுப்பார்கள். 

மேலும் முளைக் கட்டிய சத்துமாவின் பெருமைகளை பெருமையோடு அவர் சொல்லும்போது மலைக்க வைத்தது. 

செரிமானத்திற்கு உதவும்.  இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எடை குறைய  உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இரத்தக் கொழுப்பு அளவை குறைத்து  இதய நோய்க்கான ஆபத்தை  குறைக்கும்.  வைட்டமின் சி உள்ளதால் இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். வைட்டமின் ஏ நிறைந்துள்ளது இதனால் கண்பார்வை அதிகரிக்கும்.

நமது முன்னோர்களைப் போல் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.  இயற்கையான முறையில் உற்பத்தி செய்த  பாரம்பரிய உணவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் திரும்ப வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் என பேசி முடித்தார்.  

அம்மா, அப்பா திரு. அப்துல் ஹமீது  மற்றும் குடும்பத்தினரின்  அனுபவமும், முகமது அனீஸ் அவர்களின் அறிவும் கலந்து

திண்டுக்கல்லில் ஆர்க்வில்லே (Orgville-ஆர்கானிக் வீடு) கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துவோம். தொடர்புக்கு : 73887 87338

Spread the lovely business news