சென்னை “எவர் கிரீன் ஏஜென்சீஸ்”   

வீணாகக் குப்பையில் வீசப்பட்ட பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் உணவு வழங்க, உணவகங்கள், கேட்டரிங், பெரிய நிறுவனங்கள் மற்றும்  நட்சத்திர ஓட்டல்கள் வரை பாக்கு மட்டைத் தயாரிப்புகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு.  வீணான பொருள் இன்று விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது. 

சென்னை வளசரவாக்கத்தில் சிறப்பாக இயங்கிவரும் ஸ்டார்ட்அப் நிறுவனம்   “எவர் கிரீன் ஏஜென்சீஸ்”  (Ever  Green  Agencies)  நிறுவனர் திரு. பாவேந்தன் அவர்களுடன் அலை பேசி பேட்டி  மூலம் பல அனுபவமிக்க செய்திகளைப் கேட்க  முடிந்தது.  

இயற்கையை அழித்து அதன் மூலம் வரும் பலவித மூலப் பொருட்களை, நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் பிளாஸ்டிக், பாலித்தின் போன்ற பொருட்களால் இயற்கை மட்டுமின்றி, மனிதர்களின் உடல்நலமும் கெடுகிறது. அதற்கு மாறாக பாக்கு மட்டை பொருட்கள் தயாரிக்கத் தொடங்கி,  கிடைத்த அனுபவத்தை வைத்து, அதை தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி விற்பனை செய்த பாவேந்தன், தன்னை போலவே இளம்  தொழிலதிபர்களை மேலும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சியும் கொடுத்து பயின்றவர்கள் தயார் செய்து கொடுக்கும் பாக்கு மட்டை பொருட்களையும் தானே கொள்முதல் (Buy Back) செய்து கொள்வதாக உறுதி அளிக்கிறார். 

“கொரொனாவில் பாக்கு மட்டை பொருட்கள் விற்பனை எந்த அளவில் உள்ளது” என்பதற்கு பதில் அளிக்கையில், கொரொனாவுக்கு முன்பு (கொ. மு) இருந்ததை விட நல்ல அளவில் விற்பனை கூடி உள்ளது, மக்களிடம் விழிப்புணர்வு அதிகமாகி உள்ளது என்றார். ஒருவர் பயன்படுத்திய உணவுத்தட்டு, டம்ளர் போன்றவற்றை மீண்டும் அடுத்தவர் பயன்படுத்த விரும்புவதில்லை. 

வேகமான இயந்திரகதி வாழ்க்கையில்  நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, அதை தூக்கி எறிந்து விட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம் இது. சாப்பிட தட்டும் வேண்டும். அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும். அதே சமயம் அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காததாக  இருக்க வேண்டும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.

மேலும் இதன் சிறப்பம்சங்கள் குறித்து பேசுகையில்… பாக்கு மட்டை எவ்வித கெமிக்கலும்  இல்லாத பொருள். ஆயுர்வேத குணங்கள் அடங்கியது. இலகுவாக மக்கும் தன்மை கொண்டதால் சுற்றுப்புறச்சூழலுக்கு மிகவும் ஏற்றது. அதிக சுகாதாரமானது. 100 சதவீதம் இயற்கையானது. மிக முக்கியமாக இந்தப் பொருட்களை தயாரிப்பதற்காக எந்த மரங்களையும் நாம் வெட்டுவதில்லை.

அதிகக் குளிர்ச்சி, அதிக  சூடு இரண்டையும் தாங்கக் கூடியது பாக்கு மட்டைப் பொருள்கள். ஃப்ரிட்ஜில் வைப்பதாலோ, சுடச்சுடப் பொருள்களை வைப்பதாலோ, பாக்குமரத் தட்டு எந்த எதிர்விளைவையும் ஏற்படுத்துவதில்லை. 

தற்போது தட்டுகள் மட்டுமின்றி, பாக்கு மட்டைகளை பதப்படுத்தி டீ கோப்பைகள், டம்ளர்கள், பல்வேறு வடிவ கிண்ணங்கள், சிற்றுண்டி பிளேட்டுகள், பாக்கிங் செய்ய பயன்படும் டப்பாக்கள் போன்றவற்றையும் தயார் செய்கிறார்கள்.  இதற்கு ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

எங்களிடம் இயந்திரம் வாங்குபவர்களுக்கு, இயந்திரம் எப்படி இயக்குவது,  பொருட்கள் எப்படி செய்வது என கற்றுக் கொடுப்பதோடு. புராஜெக்ட் ரிபோர்ட் செய்து கொடுக்கிறோம். 

உங்கள் மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்தால், அதன்மூலம் சிறுதொழில் எனச் சான்று பெற்று, மின் கட்டணச் சலுகை பெறலாம். இந்த இயந்திரம் வாங்குவதற்கும், மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் 

அரசாங்கம் மூலம் கடன் பெற்றால், 35% மானியம் கிடைக்கும்.

பேட்டி முடிவில் பாவேந்தன் அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். பிளாஸ்டிக் ஆபத்திலிருந்து பூமியைக் காப்பாற்றும் முயற்சிகளில், பாக்கு மட்டைப் பொருட்கள் உபயோகத்துக்குப் பெரிய பங்குண்டு, எனவே இயந்திரங்களுக்கு அரசு விதிக்கும் ஜி.யெஸ்.டி. (GST) 18% என்பதை குறைத்தால் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உதவியாகவும், உற்ச்சாகம் அளிப்பதாகவும் இருக்கும் என்றார். 

இந்தத் தொழிலில் ஈடுபட்டால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். அது மன நிறைவைத் தரும். 

தொடர்புக்கு : 99520 95031

வெப்சைட் :  www.evergreenarecaplates.com 

Spread the lovely business news