டீ கடைக்கு நாம் சென்றால் “நாலு டீயில் ரெண்டு அரை சக்கரை, ஒண்ணு சக்கரை இல்லாமல், ஒண்ணு நார்மல் சக்கரை” என சொல்லக் கேட்பது சகஜம். அந்த அளவுக்கு பெரும்பாலான மக்களை சர்க்கரை நோய் பாடாய்ப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பது இனிப்புத் துளசி எனப்படும் சீனித்துளசி.

பெருமை மிக்க இந்த சீனித்துளசி பயன்பாட்டை தமிழகத்தில் அறிமுகம் செய்த  பெருமை மதுரை மக்கா புட்ஸ் (MAKa Foods)  நிறுவனர் திரு. முத்துகிருஷ்ணன்  அவர்களைச் சாரும். அவரை அலைபேசியில் பேட்டி கண்டது சுவாரசியமாக இருந்தது.  

“எங்கள் குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலோர் நாடு முழுவதும் பயணம் செய்த ராணுவ வீரர்கள். அவர்களைப் போல நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு உள்ளத்தோடு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். என்ன செய்யலாம் என்ற தேடல் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அப்போதுதான், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பயன்படும் சீனித்துளசி மீது என் கவனம் திரும்பியது”.

சீனித்துளசி இலையில் கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கும், எசென்சில் (Extract) 250-300 மடங்கும்  இனிப்புத்தன்மை அதிகம். ஆனாலும், மிகக்குறைந்த சர்க்கரை மற்றும் மாவுச்சத்து கொண்ட பொருட்களே இதில் உள்ளன. கார்போஹைட்ரேட் ஜீரோ அளவில் இருக்கிறது. இனிப்பை ஆபத்தில்லாமல் சுவைக்க இதை பயன்படுத்தலாம். தரமான அசாம் டீத்தூளுடன் பொடி செய்யப்பட்ட சீனி துளசி சேர்க்கப்பட்டு டிப் டீ பாக்கெட்டாக (Dip Tea Packet) தயார் செய்துள்ளார்கள். இதை ஒரு கப் வெந்நீரில் முக்கி நனைத்தால் டீ தயார்.  தேநீரின் மணமும்  குணமும் சுவையும் அப்படியே இருக்கும். ஊட்டச்சத்து விதியின் (Nutritional fact) அடிப்படையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் பிறகே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

“வெள்ளைச் சர்க்கரையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், உணவு எளிதில் செரிக்காது.. ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரித்து,சர்க்கரைநோய் பாதிப்பு அதிகமாகும், கொழுப்பு உருவாகும். இதனால், உடல் பருமன், இதயநோய் பாதிப்புகள் ஏற்படும். வெள்ளைச் சர்க்கரையில் சோடியத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இது சர்க்கரைநோயை மட்டுமல்லாமல் மற்ற நோய்கள் வருவதற்கும் காரணமாகிவிடும்” என அச்சுறுத்துகிறார் முத்துக்கிருஷ்ணன்.

மங்கோலியா நாட்டில் உணவகங்களில் “சர்க்கரை வெள்ளை விஷம், அதிகம் பயன்படுத்தாதீர்” என்ற அறிவிப்பு பலகையை ஆகாங்கே காணலாம். 

நமது தமிழ் கலாசாரத்தில் அறுசுவை உணவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், சர்க்கரை நோயாளிகள் அதை சுவைக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எல்லோருக்கும் பிடித்த இனிப்புச் சுவையை சர்க்கரை நோயாளிகள் ருசிக்க முடியாது. இந்தக் குறையைப் போக்க, பவுடர் வடிவிலும்சீனித்துளசி கிடைக்கிறது. 

சீனா, ஜப்பான், துருக்கி போன்ற நாடுகளில் மக்கள் அதிக அளவில் சீனித்துளசியை பயன்படுத்துகிறார்கள். 

கோவை, பொள்ளாச்சி, மதுரை போன்ற ஊர்களில் சீனித்துளசி பயிரிடப்படுகிறது. எனினும், சீனித்துளசி பயிரிடுவது பற்றி, விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என குறைபட்டுக் கொண்டார். சீனித்துளசி பயிரிட யாருக்காவது ஆர்வம் இருந்தால் துளசி இலையாகவும், விதையாகவும்  வாங்கித்தர முடியும் என்கிறார். ச்சினித்துளசி பயிரிடுவது மூலம்,  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவும் முடியும் என்று கூறுகிறார். 

சீனித்துளசியை நாற்றுப் பண்ணைகளிலும், நர்சரிகளிலும் வாங்கி வளர்க்கலாம். மாடித்தோட்ட தொட்டியிலோ வீட்டின் தரைதளத்தில் உள்ள இடங்களிலோ வளர்க்கலாம். காலை, மாலை என இருவேளைகளிலும் தண்ணீர் ஊற்றவேண்டும். மண் ஈரமாகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றினால் போதும். அதிக தண்ணீர் தேவையில்லை. 40 டிகிரி வெப்பம் வரை உள்ள பகுதிகளிலும் சீனித்துளசி செடி வளரும்..

சீனித்துளசி இலைகளை நன்றாக உலரவைத்து, அதன் மீது சூடான நீரைப் பாய்ச்சி, அதிலிருந்து ஸ்டீவியா என்ற பொருள் பிரித்தெடுக்கப்பட்டு, பொடியாக்கப்படுகிறது.

எதிர்கால தொலைநோக்குப் பார்வை குறித்து கேட்டேன், எதிர்காலத்தில் சீனிக்கு பதில் சீனித்துளசி என்பதை இந்தியா முழுதும்  கொண்டு செல்லவேண்டும் என்பதுதான். சீனித்துளசியில் பிஸ்கெட், இனிப்பு வகைகளைத் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் சொன்னார் முத்துக்கிருஷ்ணன். ஆன்லைன் விற்பனையையும் செயல்படுத்தி வருகிறார்.

தாங்கள் தயாரிக்கும் பொருளின் நன்மைகள், விவரங்கள் “மக்களுக்கு கற்பித்து விற்பது” என்ற புதிய விதியை  அமைத்து “BsquareC – biz to biz to Customer” என்ற கான்செப்டில் எங்களோடு இணைந்து பணியாற்ற அழைக்கிறோம் என உங்களை வரவேற்கிறார்.

“அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு” என சீனி துளசியை பார்த்து நாம் பாடலாம் போலுள்ளது என நான் பாடிக் காட்ட, இனிக்க சிரித்து இருவரும் விடை பெற்றோம்.

தொடர்புக்கு : 96290 09555 / 96299 65488

வெப்சைட் : www.seenithulasi.com  

Spread the lovely business news