ரீ-செல்லிங் முறையில் பணம் சம்பாதிப்பது என்பது காலம் காலமாக இருப்பது தான். ஆனால் அவற்றை செயலி மூலமாக செயல்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றியை கண்டிருப்பது “மீஷோ” என்ற கம்பெனி ஆகும்.

என்னென்ன பொருட்கள் விற்கிறார்கள்? 

மீஷோ செயலியில் ஜுவல்லரி, வெஸ்டர்ன் ஆடைகள், ஆண்களுக்கான ஆடைகள், இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் /  பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பொருட்களை ரீ-செல்லர் மூலமாக விற்கிறார்கள்.

 மீஷோ எப்படி செயல்படுகிறது?

மேலே கூறிய பலதரப்பட்ட பொருட்களை மீஷோ மொத்த விலையில் வாங்கி (இவர்களிடம் 15,000 மொத்த விற்பனையாளர்கள் ரிஜிஸ்டர் செய்துள்ளனர்) அவற்றின் கேட்லாக்கை செயலியில் வகை வாரியாக வைத்திருக்கிறது. அதை ரீ-செல்லர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகிறார்கள், அதாவது ஷேர் செய்கிறார்கள். அனுப்பப்படும்  அந்த பொருள் வாங்குபவர்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் அவர் ஆர்டர் கொடுக்கிறார். தனக்கு வரும் ஆர்டரில் ரீ-செல்லர் தனது லாபத்தை அதில் சேர்த்துக் கொண்டு அந்த ஆர்டரை மீஷோவிடம் கொடுக்கிறார். மீஷோ கேஷ் ஆன் டெலிவரி வகையில் டெலிவரி செய்கிறது. ரீ-செல்லரான நீங்கள் உங்களுடைய லாபத்தை நீங்களே நிர்ணயிக்கலாம். 

நீங்கள் எப்படி பொருட்களை விற்கலாம்? 

வாட்ஸப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவைகள் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு மீஷோ புராடக்ட்களை அனுப்பலாம். அப்படி நீங்கள் ஷேர் செய்யும் புராடக்ட்கள் அவர்களுக்கு பிடித்தமானதாக இருந்தால்  அவர்கள் வாங்கும் போது உங்கள் லாபத்தை அதில் கூட்டி வைத்து விற்கலாம்.

நேரடியாகவும் பலர் இருக்கும் இடத்தில் சென்றும் மீஷோ ஆப்-பை காண்பித்தும் வியாபாரம் செய்யலாம். 

யாருக்கும் இது உதவும்?

இல்லத்தரசிகள், மாணவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர்களுக்கு இது ஒருவரப்பிரசாதம் ஆகும்.

ஹோம் மேக்கர், வணிகர்கள், பௌட்டிக் உரிமையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்தொழில் நிறுவனங்கள் மீஷோவின் சிறந்த மறு விற்பனையாளர்களாக உள்ளனர்.

யார் பயன் பெற்றிருக்கிறார்கள்?

ரீ-செல்லர்கள் 80  கோடிக்கும் அதிகமான ரூபாய்  இதன் மூலம் சம்பாதித்துள்ளனர்.   90 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் விற்பனையாகி உள்ளன. இந்தியாவில் ஐந்தாயிரத்திருக்கும் அதிகமான நகரங்கள் இதன் கீழ் வருகின்றன. 

ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த கம்பெனியில்  ரீ-செல்லெர்கள் ஆகி உள்ளனர்.

உங்கள் விற்பனை இலக்குகளை நீங்கள் அடைந்தால் உங்களுக்கு ரூபாய் 6000 வரை வாரத்திற்கு போனஸாக கொடுக்கப்படுகிறது.

பேஸ் புக் முதலீடு

இதனால் தான் உலகத்தின் பெரிய கம்பெனிகளில் ஒன்றான  பேஸ் புக், இந்த கம்பெனியில் சில நாட்களுக்கு முன்பு சுமார் 25 மில்லியன் டாலர் (140 கோடி ரூபாய்) முதலீடு செய்து உள்ளது. 

சென்று பாருங்கள் இவர்களின் இணையத்தளத்தை www.meesho.com

இவர்களது செயலியை தரவிறக்கம் செய்து உங்களை பதிவு செய்து கொள்வது மிகவும் முக்கியம் (meesho)

திருப்பூர் செய்யலாமே?                            

திருப்பூர் உலகத்திற்கே சப்ளை செய்கிறது. இது போன்ற ரீ-செல்லிங் முறையை திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் புராடக்ட்களான ப்ரஷ் மற்றும் செகன்ட்ஸ் டி-சர்ட்ஸ், பனியன், லெக்கிங்க்ஸ் , ஷார்ட்ஸ், நைட் பேண்ட்ஸ் ஆகியவைகளுக்கு செய்யலாம். அது நிச்சயம் நல்ல ஒரு வியாபாரத்திற்கு வழி வகுக்கும்.

Spread the lovely business news
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •