நீங்க ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்க போறீங்களா?… அப்படின்னா பல ஸ்டார்ட் அப் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு புதுமையாக தோன்றும். அதை தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அவற்றை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகரன். இவர் மிகச்சிறந்த மொழி வல்லுநர், கைதேர்ந்த ஓவியர். இந்தத் தொடர் ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கப் போகும் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் தொடர் கட்டுரைக்குள் செல்வோம். 

டிஸ்டிரப்ஷன் (Distruption) 

வணிகபுலத்தில் “டிஸ்டிரப்ஷன்” என்றால் இடையூறு என்று எடுத்துக் கொள்ள கூடாது. வழக்கமான பாணியை கைவிட்டு புதிய யுக்திகளை கையாண்டு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதைதான் “டிஸ்டிரப்ஷன்” என்கிறோம். புதிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் முதலீடு செய்பவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்றால் அவர்கள் முதலீடு செய்யப்போகும் கம்பெனி சந்தையில் எந்த அளவு புதுமைகளை கொண்டு வரும் என்பதுதான். ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால் “ஊபர்” கார் கம்பெனியை கூறலாம். அது கார்களை வாடகைக்கு எடுக்கும் விதத்தையே மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.

பொருட்களின் முதற்கட்ட தயாரிப்பு – (MVP – Minimum Viable Product) 

ஒரு பொருளை முழுமையாக வடிவமைத்த பிறகு அது சந்தையில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது எப்போதுமே ஒரு பெரிய கேள்விக்குறியாகத் தான் இருக்கும். ஆதலால் உங்களுடைய ஐடியாக்களை சீக்கிரமாக நீங்கள் செயல்படுத்திப் பார்க்க அதிக பொருள் செலவு இல்லாமல் பொருட்களின் முதற்கட்ட தயாரிப்பைத்தான் “Minimum Viable Product” எனப்படுகிறது. அது உபயோகிப்பாளர்களின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து, அது அவர்களால் நல்ல புராடக்ட் என  ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், பின்நாட்களில் அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து மேம்படுத்தப்பட்ட நேர்த்தியான தயாரிப்பு உருவாக்க வழி வகுக்கும்.

அல்பா வெளியீடு (Alpha Release)

ஒரு மென்பொருள் வெற்றி பெற தொடர் சோதனைகள் அவசியம் என்பதால் நிறுவனங்கள் தங்களது பீட்டா பதிப்பை மக்களிடம் சோதனைக்கு கொடுக்கும் முன்பு “ஆல்பா” வெளியீட்டை பலமுறை தங்களுடைய நிறுவனத்தில் சோதனை செய்து வெளியிடுகிறார்கள். இது தான் “ஆல்பா ரிலீஸ்” எனப்படுகிறது.

பீட்டா வெளியீடு (Beta Release)

நன்கு சோதனை செய்த ஆல்பா வெளியிட்டை மக்களிடம் கொடுத்து சோதனை செய்து பார்க்க சொல்லுவதுதான் “பீட்டா ரிலீஸ்” எனப்படுகிறது.

ஹாக்கி ஸ்டிக் (Hockey Stick)

ஒவ்வொரு வணிகரும் தங்களுடைய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை வெகுவிரைவாக வளர்க்கவே விரும்புகிறார்கள். உண்மையில் அனுமானித்த அளவு விரைவான முன்னேற்றத்தை எட்டுவது அவ்வளவு எளிதல்ல. பொதுவாக ஸ்டார்ட்அப்பின் தொடக்கம்,  வளர்ச்சி அது எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், மரணக் குழி ஆபத்துக்கள் (near death experience) ஆகியவற்றைப் பொருத்தே  வளர்ச்சி அமைகிறது.

வரும் இதழ்களிலும் ஸ்டார்ட் அப் பிசினஸில் பயன்படுத்தப்படும் மேலும்  பல சொற்களுடன் சந்திப்போம்.

(தொடரும்)

Spread the lovely business news
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •