திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் உலகத் தரம் வாய்ந்த குளிர் சாதன கிடங்கு NSR ஃபார்ம் ஃபிரெஷ் (NSR Farm Fresh). தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த குளிர்பதன கிடங்கு நிறுவனர் திரு. N.S.ரத்தினம் சந்திரசேகரன் அவர்கள் தனது மகன்களோடு சேர்ந்து சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார்.    இது தென்னிந்தியாவின் மிகப் பெரிய காய்கறி மொத்த வியாபார சந்தைக்கு பெயர்போன ஒட்டன்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால்,  கம்பம், தேனி, கொடைக்கானல், கரூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் எளிதில் சென்று அணுக முடிகிறது.  சுற்றுவட்டார விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது. 

குளிர்பதன கிடங்கில் விளைபொருட்களை வைப்பதால் அவற்றின் ஈரத்தன்மை குறையாது. ஈரத்தன்மை குறையும் போதுதான் வெளியிலுள்ள வெப்பம் காரணமாக ஈரத்தன்மை காய்ந்து, காற்றிலுள்ள ஈரப்பதம் (Humidity) மேலே பூசணம் பூத்து பாக்ட்ரியாவாக மாறி பொருட்களை நாசமாக்கி விடுகிறது. எனவே இத்தகைய குளிர்பதன கிடங்குகள் விவசாயிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம். 

பழங்கள் பழுக்க வைக்கும் பிரிவின் சிறப்பு அம்சங்கள் 

இப்பிரிவு முழுவதும் தமிழகத்தில் விளையும்  வாழைப்பழங்களை ‘பிராண்டட்’ (Branded) செய்து பிரபலப்படுத்துவதற்கு என்றே  உருவாக்கப்பட்டது. 

ஐரோப்பிய வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்ட நவீன தொழில் நுட்பத்தால் பழங்களின் ஆயுட்காலமும், சுவையும், தரமும் மாறி விடாமல் இயற்கையான முறையில் பழுக்க வைக்கும்.  

ஒவ்வொன்றும் 16 மெட்ரிக் டன் எடை கொள்ளளவு கொண்ட 10 பழுக்க வைக்கும் அறைகள் உள்ளன.  இங்குள்ள அனைத்து உள்கட்டமைப்பும் டாடா குழுமத்தைச் சேர்ந்த வோல்டாஸ் (Voltas) நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற  குளிர்விக்கும் வசதி கொண்டது.  தட்பவெட்பம், குளிரூட்டும் ஈரத்தன்மை போன்ற அளவுகளை கம்ப்யூட்டர் மூலம் மிகத் துல்லியமாக கண்காணிப்பதாலும்  மற்றும் கட்டுப்படுத்தும் வசதியாலும் பழுத்த பழங்களை அதிக நாட்கள் பாதுகாத்து வைத்து விற்பனை செய்யும் வகையில் உள்ளது பாராட்டத் தக்கது. இதனால் பெரும் நஷ்டங்கள் தவிர்க்கப்படுகின்றன. 

பேக்கிங் பிரிவு சிறப்பம்சங்கள்

இப்பிரிவு சுமார் 20 ஆயிரம் சதுரஅடி அளவில் பரந்து விரிந்து  கிடக்கும் குளிர்சாதன வசதியுடன் கூடிய கட்டமைப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தப்படுத்தி தரம் பிரித்து பேக்கிங் செய்ய தனித் தனிப் பிரிவுகள்.  நவீன முறையில் குளிர்பதன கிடங்கில் அடுக்கி பாதுகாப்பாக வைப்பதற்கான வசதி கொண்டது.

குளிர்பதன கிடங்கின் சிறப்பம்சங்கள் 

பலவகை விளைப் பொருட்களை சேமித்து வைக்கும் வசதி மற்றும் தட்ப வெப்ப வசதியுடன் கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உள்கட்டமைப்பு. 8 அறைகளாக பிரிக்கப்பட்டு 6000 டன் கொள்ளளவு கொண்ட வசதி. 

தட்பவெப்பம் +2 டிகிரி செல்சியஸ்  முதல் -20 டிகிரி செல்சியஸ் வரை 90 சதவீத ஈரப்பதத்துடன் பொருட்களை பாதுகாத்து வைக்க முடியும். அனைத்து அறைகளிலும் கணினிகள் மூலம் கண்காணித்து கட்டுப்படுத்தும் வசதி.  

35 அடி உயரம் வரை அலமாரிகளில் பொருட்களை  அடுக்கி வைக்கும் வசதி. பொருட்களை துரித முறையில்  வண்டியில் இறக்கவும் ஏற்றவும் நவீன வசதிகள்.  நவீன இயந்திரம் மூலம் பொருட்களை குளிர்பதன அறைகளின் அலமாரிகளில் விரைவாக அடுக்கி வைக்கவும் மற்றும் எடுத்து வரவும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனம் மிகப் பெரிய சேமிப்பு திறன் கொண்டது. 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவும், 8,000 தட்டுகள் (Pallets) பொருட்கள் அடுக்கக் கூடிய வசதி கொண்டவை.

தீ விபத்து பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்ட கட்டமைப்பு. தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மிகப் பெரிய சரக்கு டிரக்குகளையும் கூட  எடை போடும் அளவுக்கு  நூறு டன் எடை மேடை வசதி.  வண்டிகளை நிறுத்த போதுமான இடவசதி. 

எந்த விதத்திலும் சுற்றுச்சூழலை பாதிக்காத அளவுக்கு பராமரிக்கப்படும் குளிர்பதன வசதி. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு சுங்க  அனுமதி பெறுதல் போன்ற  சில சிறப்பு சேவைகளும் இங்கே செய்து தருகின்றனர்.  

தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் உலகத் தரம் வாய்ந்த குளிர் சாதன கிடங்குகளில்  NSR ஃபார்ம் ஃபிரெஷ் ஒன்றாகும். இதன் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இந்த கிடங்கை பயன்படுத்தி பயனடையலாமே!

தொடர்புக்கு : 98409 12955 / 98402 00770

Spread the lovely business news