Poka – Yoka

நம் தொழிலில் தரத்தை (Quality) உயர்த்த விரயங்களை குறைப்பதும் ஒரு வழி என கடந்த இதழில் அறிந்தோம். அந்த விரயங்களை தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தின் பெயர்தான் “Poka-Yoka”.

“Poka-Yoka” என்றால் என்ன?

“Poka-Yoka” (Poh-KahYoh-Kay) என்பது ஒரு ஜப்பானிய சொல். தவறுகளை நிரூபித்தல் / தவறுகளை தடுப்பது என்பதே இதன் தமிழ் அர்த்தம். ஆங்கிலத்தில் இதை “Mistake Proofing” என்று சொல்கின்றனர்.

“டொயோட்டா” நிறுவனத்தைச் சேர்ந்த “Mr. Shigeo Shingo” எனும் பொறியாளர் இந்த தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து “டொயோட்டா” நிறுவனத்தின் தரத்தை உயர்த்தினார். இன்று இந்த தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்களே உலகில் இல்லை. (Example: T.V.S).

பணியாளர்களால் ஏற்படும் தவறுகளே உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த தவறுகளை சுட்டிக்க்காட்டுவதற்கான அல்லது தடுப்பதற்கான தொழில்நுட்பம்தான் “Poka-Yoka”. இந்த தொழில் நுட்பத்தை தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்தில் பயன்படுத்தும்போது அவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அது எச்சரிக்கை செய்யும் (அல்லது) தவறு நக்க விடாமல் தடுக்கும். எனவே தவறு நடக்கும்போதே கண்டறியப்பட்டால் / தடுக்கப்பட்டால் பாதிப்புகள் (சேதாரம்) குறையும். “Poka-Yoka” என்பது எளிதான, விலை குறைவான, செயல்திறன் மிக்க, தவறுகளை கண்டறியக்கூடிய / தடுக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பம். எனவே, தொழில் முனைவோர் அவர்களது நிறுவனத்தில் “Poka-Yoka” பயன்படுத்தி விரயங்களை தவிர்த்து தரத்தை உயர்த்தலாம்.

உதாரணமாக,

1) ஒரு உணவுப் பொருள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களில் (Horlicks, Britannia), உணவுப் பொருட்களை சரியான எடையில் பேக் செய்வது மிகவும் முக்கியம். 100g பேக் செய்ய வேண்டிய நிலையில் அதன் எடையை குறைத்தாலோ / அதிகரித்தாலோ (80g (or) 120g) நிறுவனத்துக்கு இழப்பு (Quality Problem) ஏற்படும். அத்தகைய சூழலைத் தவிர்க்க எடை போடும் இயந்திரத்தில் ஒரு alarm (Sound / Light) வைத்தால் தவறான எடையிடும் போது அதில் உள்ள சவுண்ட் / லைட் சென்சார் மூலம் நமக்கு எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் பொருளின் எடை தவறாக உள்ளது என்பதை நாம் கண்டறியலாம். தரத்தையும் மேம்படுத்தலாம்.

2) ஒரு சில மேம்பட்ட (latest) நான்கு கார்களில், அதன் கதவை சரியாக நாம் மூடவில்லையெனில் ஒலி எழுப்பி அந்தத் தவறை நமக்கு சுட்டிக்காட்டும். இதுவும் ஒரு “Poka-Yoka” தான்.

3) நாம் அன்றாடம் பயன்படுத்தும் ATM இயந்திரத்தில், அதில் உள்ள விளக்கு ஒளிர்வு (Flashing Light) பெற்றால் மட்டுமே நம் ATM அட்டையை (ATM Card) இயந்திரத்தில் செலுத்த முடியும். இந்த விளக்கு ஒளிர்வதும் (Light Flashing) ஒரு “Poka-Yoka”  ஆகும்.

4) பெரிய வணிக நிறுவனங்களில் தீயால் புகை ஏற்பட்டால் (அல்லது) ஏதேனும் விஷவாயு கசிவு ஏற்பட்டால் Sensor மூலம் எச்சரிக்கை செய்யும் வசதி (Light / Sound) செய்திருப்பார்கள். இந்த தொழில் நுட்பமே “Poka-Yoka”.. சில ஆண்டுகளுக்கு முன் சென்னையிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றில் இந்த தொழில்நுட்பம் இல்லாததால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டதை நாம் அனைவரும் அறிவோம்.

இத்தகைய எச்சரிக்கையானது (Light / Sound) தவறுகள் நடக்காமல் தடுப்பதற்கோ அல்லது தவறுகள் நடந்தால் நமக்கு உடனே உணர்த்துவதற்கோ பயன்படுகிறது.

தரத்தில் பாதிப்புகளை பொறுத்த வரை “Mr.Heinrich” என்பவர் ஒரு கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். அதாவது,

Heinrich’s Theory = 1:29:300.

Behind one grave problem, there are 29 minor problems &300 chilling problems. அதாவது ஒரு பெரிய தவறு (Quality Problem) க்கு பின்னால் 29 சிறிய தவறுகளும், 300 நுண் தவறுகளும் இருக்கின்றன். எனவே நுண் தவறுகளை தவிர்ப்பதற்கு / கண்டறிவதற்கு “Poka-Yoka” தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நம் தவறுகளை தவிர்ப்போம்; தரத்தை உயர்த்துவோம்!

தரம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது “ISO” ஆகும். ISO என்றால் என்ன?அடுத்த இதழில் அறிவோம்.

(தொடரும்)

Spread the lovely business news