சென்னை வளசரவாக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு மேலாகச்  சிறந்த முறையில் இயங்கிவரும்  “எவர் கிரீன் ஏஜென்சீஸ்”  (Ever  Green  Agencies) நிறுவனர் திரு. பாவேந்தன் அவர்களை பேட்டி  காணும்  வாய்ப்பு கிடைத்ததன் மூலம் பல அறிவார்த்தமான, அனுபவமிக்க செய்திகளைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது.  அவர்  பி. எஸ்சி.,  கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து அது   சார்ந்த வேலையில்  அமர்ந்த பின்னர் அதில் சரியாக மனம் ஒட்டவில்லை. காரணம் நாம் மற்றவர்களிடம் வேலை பார்ப்பதைவிட நாம் பல நூறு பேருக்கு வேலை கொடுத்து பயிற்சி கொடுத்து இளம்  தொழிலதிபர்களை ஏன் உண்டாக்கக் கூடாது என்ற ஆதங்கத்தில் உருவானதுதான் இந்த பாக்குமட்டை சார்ந்த பொருட்கள் செய்யும்  நிறுவனம்.  

முன்பு பாக்குமட்டை என்பது அழுகி அழியக்கூடியது என்பதாகக் கருதி  அதை ஒதுக்கி வைத்திருந்தனர்.  ஆனால் இவர்  இதற்குப் பலவித உருவங்கள் கொடுத்து உண்ணும்போது பரிமாறப் பயன்படுத்தக்கூடிய தட்டுகள், கப், காபி கப், கிளாஸ் இப்படியாகப்  பல பொருட்களாக  மாறி,  இவை விருந்தோம்பலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டது என்றால் மிகையாகாது.  

இந்த பாக்குமட்டை பொருட்களில் பாராட்டும் அம்சங்கள் பல உண்டு. 100% இயற்கைப் பொருள், லேசான எடை, கவர்ச்சிகரமான வடிவமைப்பு, மைக்ரோ ஓவனில் வைத்து உணவைச் சூடு படுத்தலாம், காய்கறிகளை பேக்கிங் செய்யலாம், ஸ்னாக்ஸ் வைக்கப் பயன்படுத்தலாம்.  வலிமையான நார்கள் கொண்டதால் இவை இலகுவாகக் கிழிய, கீறல்கள்   விழ வாய்ப்பில்லை.  கேன்டீன் மற்றும்   விசேஷ வீடுகளில் சாப்பாடு தட்டுகள்  பயன்படுத்தியப் பின்னர்  தட்டுகள் போன்றவற்றைக் கழுவி பயன்படுத்துவதால் அதிக நேரம் செலவாகும் என்பது மட்டுமல்லாமல் தண்ணீர் வீண் விரயம் ஆகும். ஆனால் இந்த  பாக்குமட்டை பொருட்களை பயன்படுத்துவதால் இத்தைகைய  வீண் விரயங்கள்  தடுக்கப்படுகின்றன. அதுபோக பயன்படுத்தியப் பாக்கு மட்டை பொருட்களை ஆடு மாடுகள் விரும்பி சாப்பிடுகின்றன. இதனால் குப்பை சேருவது குறைகிறது. இப்படியாகப் பாக்குமட்டையின் பெருமையை  அடுக்கிக் கொண்டு சென்ற பாவேந்தன் அவர்கள் “பாக்கு மட்டை சிறப்புகள் இந்த அளவு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா” என  சிரித்தபடியே கேட்டார்.

1999 வரை பாக்கு மட்டையைச் சீண்டுவார் யாருமில்லை என்ற நிலை மாறி, இன்று விருந்துகளிலும், கேண்டீன்களிலும் பெரும்பாலும் பாக்குமட்டை தட்டுகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. சென்னையில் பிரபல நிறுவனங்களான கிருஷ்ணா ஸ்வீட்ஸ், முருகன் இட்லிக் கடை, இன்ஃபோசிஸ், இந்தியா சிமெண்ட்ஸ், தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் போன்ற நிறுவனங்களுக்குத் தனது உற்பத்தியை நேரடி விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தயாரிப்புகள் அனைத்தும் அதி நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நியாயமான விலையில் வழங்கி வருவது பாராட்டத்தக்கது.  எங்கள் தயாரிப்புகளை  வாங்கும் வாடிக்கையாளர்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஏற்ற தரம் ,புதுமை, சேவை என அனைத்தையும் நிறைவாகத் தருகிறோம்.  எத்தகைய சூழ்நிலையிலும் தரத்தில் எவ்வித சமரசமும் செய்ய நாங்கள் இடம் கொடுப்பதில்லை. தரம் குறைந்த பொருட்கள் எங்களிடமிருந்து தள்ளி நிற்க வேண்டியதுதான்.

 “தான் பெற்ற உயர்வு இவ்வையகம் பெறுக” என்ற எண்ணத்தில் தனது அனுபவத்தை மற்றவர்களுக்கு வகுப்பு எடுத்துச் சொல்லிக் கொடுப்பதோடு, பாக்குமட்டை பொருட்கள் செய்வதற்கான இயந்திரத்தை தானே உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார். “கரும்பு தின்னக் கூலியா” எனக்  கேட்பார்கள். ஆம் உண்மைதான் இவர்  “கரும்பு தின்னக் கூலியும் தருகிறார்”. எப்படியென்றால்  நீங்கள் உற்பத்தி செய்யும் பாக்குமட்டை பொருட்களை அவரே  வாங்கிக் கொள்கிறார் (Buy Back). 

இதற்கான ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் மாதம் இரு முறை குறைந்த கட்டணத்தில் நடத்துகிறார்.  காலையில் வாய்மொழி விளக்கங்களும், மதியம் உங்களுக்கு  செய்முறை பயிற்சிக்கும்  வாய்ப்பளிக்கிறார்.   

பாக்கு மட்டை தட்டுகள் இயற்க்கையாகவே எவ்வித வாசனையும்  இல்லாமல் சுகாதாரமாக இருப்பதால் இதில் வைத்து சாப்பிடும் உணவின் சுவை மாறவே மாறாது.    தற்போது டம்ளர், பாக்ஸ் போன்றவையும் தயாராவதால் டீக்கடையில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 

இவர் தயாரிக்கும் இயந்திரம் எளிமையான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு, பெண்கள் எளிதில் இயக்கக்  கூடிய அளவுக்கு ஈசியான  அமைப்பு கொண்டது.  உற்பத்தி செய்யும்போது சப்த மாசு (Noise Pollution), தூசு மாசு  (Dust Pollution).  

அமேசான் அல்லது ஆன்லைன் வியாபாரம் ஏதும் உண்டா என்ற எனது கேள்விக்கு உள்ளூரிலேயே சப்ளை செய்து  மாளவில்லை எனவே அமேசான் நினைவு இப்போதைக்கு இல்லை என்றார்.  

புதுவை கவர்னர் கிரண்பேடி சந்திப்பில் இவர் கவர்னரின்  பாராட்டு பெற்றவர்.  

அழியக்கூடிய பாக்கு மட்டை மூலம் நல்ல வருமானம் பெறுவதாக பெருமைப்பட கூறியதோடு, தனது உடன்பிறப்புகளின் உதவியில்லாமல் இந்த அளவுக்கு உயர்வு கண்டிருக்க முடியாது என தனது பேச்சில் நன்றி கலக்கவும் மறக்கவில்லை.  அவரது பணிவு, நட்பு கலந்த பேச்சுக்கு வணக்கம் சொல்லி விடை பெற்றேன்.

பாக்கு மட்டையை ஆழமாக நேசிக்கும் இவரை “பாக்குமட்டை பாவேந்தன்” என்று நாம் அழைத்தாலும் பொருந்தும்.  தொடர்புகொள்ள : 99520 95031வெப் சைட் :  www.evergreenarecaplates.com

Spread the lovely business news
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •