பேட்டி, கட்டுரையாளர் – அ. ஹூமாயூன், சிதம்பரம் 

பரபரப்பான இந்த உலகத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானதா என்ற சந்தேகம் அனைவருக்குமே இருக்கிறது. நம் முன்னோர்களின் உணவு முறைக்கும், நம்முடைய உணவு முறைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளது.  நம் முன்னோர்கள் பெரும்பாலும் இயற்கை உணவுகளையே தங்களின் பிரதான உணவாக கொண்டிருந்தனர்.  அதனால்தான் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இப்போது நமது தலைமுறையும் இயற்கை உணவுகளை நோக்கி திரும்பி கொண்டிருக்கிறது.

இந்த நோய்த்தொற்று காலத்தில் சத்தான வீட்டு உணவுப்பொருட்களை சாப்பிட சொல்லி மருத்துவரும் அரசாங்கமும் சொல்லி வருகின்றனர் இதை மனதில் கொண்டு,  சிதம்பரம் மணிபாரதி அச்சகத்தார் சத்தான உணவுப் பொருட்களை வீட்டுப் பக்குவத்தில் தயாரித்து மணிபாரதி “மண்பானை” என்ற பெயரில் எளிய மக்களின் வலிய உணவு விற்பனை செய்து வருகின்றனர்.  இதன் உரிமையாளர்கள் திரு.  மணிவண்ணன், திருமதி. பாரதி தம்பதியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இயற்கை உணவுகளின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே சென்றார்கள்.  

“கொரோனா காலத்தில் மக்களிடையே இயற்கை உணவு குறித்து  நல்ல விழிப்புணர்வு வந்துள்ளது. இதை பயன்படுத்தி ஆங்காங்கே பல இயற்கை உணவு கடைகளும், உணவகங்களும் உருவாகி வருகிறது. மக்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு நாங்களும் எங்களது தயாரிப்புகளை அதிகரித்துள்ளோம். சிறுதானிய சத்து மாவு,  அடை மாவு,  பல்வேறு மூலிகை தோசை வகைகள்,  கஞ்சி வகைகள்,  சாம்பார் பொடி,  குழம்பு பொடி,  கொள்ளுப்பொடி,  சூப் வகைகள் மற்றும்   ஊறுகாய் என முப்பதுக்கும் மேலான பொருட்களை சொந்தமாக வீட்டில் தயாரித்து விற்பனை செய்கிறோம்” என்றார். 

“எங்களின் அனைத்து தயாரிப்புகளும் சிதம்பரம் மேல ரத வீதியில் மணிபாரதி அச்சகத்தை  சார்ந்த ஒரு கடையில் பார்வைக்கு வைத்து விற்பனை செய்து வருகிறோம்” என்றார்.  இவர்கள் மளிகை கடை போன்றோருக்கு தயாரிப்புகளை தருவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.  காரணம் மளிகைக் கடைக்காரர்கள் அவர்களுக்கு லாபம் தரக்கூடிய பிராண்டுகளில்தான் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.  எனவே  பொருட்களின் விலையை குறைக்க வேண்டிவரும் பட்சத்தில் தரம் குறையும்.  எத்தகைய சூழ்நிலையிலும் தரத்தில் எவ்வித சமரசமும் இவர்கள் செய்வதில்லை என்பதில் மிக உறுதியாக உள்ளனர். 

“நாங்கள் எங்கள் வீட்டில் சாப்பிடுவதைதான்  மற்றவர்கள் சாப்பிட  தருகிறோம்” என்றார். இது இவர்களின்  நிறுவனத்தின் நேர்மையை காட்டுகிறது. 

அனைத்தும் ஆர்கானிக் (இயற்கை) முறையிலேயே தயாரிக்கப்படுகிறது.  எந்த ஒரு ரசாயனமும்,  செயற்கை சர்க்கரையும் கலப்பதில்லை.  எனவே இது செரிமானத்திற்கு உதவும்.  இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எடை குறைய  உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. கண் பார்வையை மேம்படுத்துகிறது. இரத்தக் கொழுப்பு அளவை குறைத்து  இதய நோய்க்கான ஆபத்தை  குறைக்கிறது.

ஆர்கானிக் பொருட்களை செல்வந்தர்கள் தான் வாங்க முடியும் என ஒரு தப்பான கருத்து உள்ளது.  முறையாக ஆர்கானிக் முறையில் தயார் செய்யப்பட்ட பொருள்கள் அந்த அளவுக்கு விலை வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை.

“ மண்பானை” என்ற பெயர் எப்படி வைத்தீர்கள் என்ற கேள்விக்கு, “பிறப்பு முதல் இறப்புவரை  பானை அன்றி வாழ்வுதான் இல்லையே” என்று சிரித்தார். 

“எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.  இயற்கையான முறையில் உற்பத்தி செய்த  பாரம்பரிய உணவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்களைத் திருப்ப வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என மணிபாரதி தம்பதி பேசி விடை பெற்றனர். 

தொடர்புக்கு : 94876 92640 / 04144 221603

Spread the lovely business news