கோயம்புத்தூர் பி. என். புதூரில் இயங்கும் சவுமி ஹெர்பல்ஸ் (Soumee Herbals) நிறுவனர் திரு. ராமநாதன் அவர்கள் விற்பனை செய்து வரும் மூலிகை டீ மற்றும் மூலிகை தலைக் குளியல் பவுடர் (Head Wash Powder) குறித்து அலைபேசியில் பேசும்போது, நமது முன்னோர்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய பல மூலிகைகளின் அருமைபெருமைகளை  தெரிந்து கொள்ள முடிந்தது. 

ராமநாதன் பார்மசிஸ்ட் (Pharmacist) படித்து மருந்து கடைகளில் வேலை பார்த்தும், பின்னர் தனது சொந்த மருந்து கடை தொடங்கியும் கிடைத்த அனுபவத்தை கொண்டு மூலிகை டீ மற்றும் மூலிகை தலைக் குளியல் பவுடர் தயாரிக்கத் தொடங்கி இன்று சிறப்பாக  விற்பனை செய்து வருகிறார்.

தலைக் குளியல் பவுடரில் 25 வகையான பழமையான மூலிகைகள் சேர்க்கப் பட்டுள்ளன. இதன் பயன்களை அடுக்கிக் கொண்டே சென்றார். 

தலை முடியை ஆழமாக வளர்க்கின்றன. மேலும் முடி வளர்வதை அதிவேகமாகத் தூண்டுகின்றன. முடியின் இயற்கையான எண்ணெய்களை முடியிலேயே தக்கவைத்துக் கொள்கிறது.  ஆரோக்கியமான மற்றும் அழகான தோற்றத்திற்கு இந்த மூலிகை பவுடர் சிறந்தது. 

இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு  முடி உதிர்தல் மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. இளம் வயதில் நரைத்தல் மற்றும் முடி உதிர்தல் இரண்டையும் கட்டுப்பாட்டில் வைக்கும். காலப்போக்கில் பொடுகு மற்றும் பேன்களிலிருந்து விடுபடலாம். 

ஆரோக்கியத்திற்கு குறைவில்லாத மூலிகை டீ 

காலையில் எழுந்ததும் காபி, அல்லது டீயின் முகத்தில் விழிப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். காபியோ, டீயோ எதுவானாலும் இன்றைக்கு சுத்தமானதாக இருப்பதில்லை. பணம் செலவு ஆவதோடு கலப்படத் தூளினை காய்ச்சி குடிப்பதால் உடல்நலம்தான் கெடுகிறது. எனவே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை டீ  பருகினால் ஆரோக்கியமாக வாழலாம்.   

தினமும் மூலிகை டீ குடித்துவந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலுக்கு வேண்டிய

சத்துகள் முழுமையாக கிடைக்கும். உடலுக்கு இயற்கையாக நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். இதனால் நோய்த்தொற்று தாக்காமல் பாதுகாத்து கொள்ளலாம். உடல் சோர்வை நீக்கி எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க விரும்பினால் நீங்கள் மூலிகை டீ யின் துணையை நாடலாம். சளி காய்ச்சல், நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய் வரை கட்டுக்குள் வைக்கும் வகையில் செயல்படும் மருத்துவ குணமிக்க மூலிகை டீ. இவை நிச்சயம் உங்கள் ஆரோக்கியத்துக்கு பக்க பலமாக இருக்கும்.

தேநீர் குடிப்பதால் மூளை செயல்பாடுகள் சீராக இருப்பதுடன் நினைவாற்றலும் சிறப்பாக இருக்கிறது.  தொடர்ச்சியாக தேநீர் குடிப்பவர்களுக்கு வயது முதிர்ச்சி காரணமாக ஏற்படும் ஞாபக குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

மூலிகை தேநீர் அருந்தாதவர்களை காட்டிலும் அருந்துபவர்களின் மூளை செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக ஆய்வு முடிவுகள் சொல்லுகின்றன என கூறியதோடு தனது இரண்டு மகள்களும் குழந்தை பருவத்திலிருந்தே இந்த மூலிகை தேநீரும், மூலிகை தலைக் குளியலும் செய்து வந்ததால் படிப்பில் சிறந்து விளங்கினர், என தன் மகள்களை பற்றி சொல்லி பெருமையடைந்தார்.    

இவரது தயாரிப்புகள் தமிழ் நாட்டில் வாங்குவதோடு வடநாட்டிலும் மக்கள் விரும்பி வாங்கி பயன்படுத்துகிறார்கள். இவரது ஒரு மகள் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் மூலமும்பயனடைந்தோர் வாய் மொழி விளம்பரம் மூலமாகவும் தற்போது அமெரிக்காவிலும்  விற்பனை செய்து வருகிறார். தொடர்புக்கு : 86103 07078               

 ramanathanvetri5@gmail.com

Spread the lovely business news
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •