கொரோனா நம் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்திருக்கிறது. காண்டாக்ட் லெஸ் (contact less) என்பது பெரிய அளவில் நடைமுறைக்கு வரலாம்.

கொரோனா காலத்துக்குப் பிறகு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்லவும் மற்ற பல உபயோகங்களுக்கும் தொழிற்சாலைகளில் மனிதர்களை வைத்து வேலை வாங்குவது குறையும் வாய்ப்புகள் இருக்கிறது. மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை ஈடுபடுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன.  இதற்கான முயற்சிகளில் பல கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன.  பல ரோபோக்களை வெளிக்கொணர்ந்து உள்ளன. இந்த ரோபோக்கள்  பேக்கேஜிங் செய்வது,  சரக்குகளை கையாள்வது, தரம் பிரிப்பது, லாஜிஸ்டிக்ஸ்,  ஹவுஸ் கீப்பிங் பணிகள் (மனித நடமாட்டத்திற்கு இடையே தரைகளை சுத்தம் செய்யவும், டிஸ்இன்பெக்ட் செய்யவும்)  ஆகிய துறைகளில் பெரிய பங்கு வகிக்கப் போகின்றன.  இவை Automated Guided Vehicle (AGV), Autonomous Mobile Robots (AMRs) என்று அழைக்கப்படுகின்றன. 

2024 வருடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரோபோக்கள் வரை இந்த இடங்களில் பயன்படுத்தப்படும் என ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ரோபோக்களில் இதுவரை கேமரா இருந்து வந்திருக்கிறது. ஆனால் இனி 3டி கேமராக்கள் வரும்.  இவற்றுடன் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் மற்ற சாப்ட்வேர்களும் இயங்குவதால் இனி  ரோபோக்களின் இயக்கத்தில், செயல்முறையில் பெரிய மாற்றங்கள் வரும். 

வெளிநாடுகளிலிருந்து இது போன்ற ரோபோக்களை இறக்குமதி செய்தால் அது விலை அதிகமாக இருக்கும். ஆதலால் பல இந்திய கம்பெனிகள் இந்தியாவிலேயே  இந்த ரோபோக்களை தயார் செய்ய இருக்கின்றன. 

Addverb, GreyOrange, GRIDBOTS, SIMPLEX ROBOTICS, Hitech Robotic Systemz ltd, Rucha Yantra, Sastra Robotics, Systemantics Robotics, KUKA Robotics (India) Private Limited ஆகிய கம்பெனிகள் இந்த துறையில் சிறந்து விளங்குகின்றன. இவர்களின் இணையதளங்களை சென்று பாருங்கள், மேலும் பல தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். 

விலகியிருப்போம், உற்பத்தியை பெருக்குவோம். 

Spread the lovely business news