எந்த ஒரு வணிகத்திலும் கூட்டாண்மை என்று சொல்லக்கூடிய பார்ட்னர்ஷிப் மூலம் நிறுவனங்கள் முதலீடு, மனித வளங்கள் போன்றவற்றைத் திரட்டுவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் அடைவதற்கு எட்டாக்கனியாக இருக்கும் இலக்குகளையும் அடையலாம். 

பெரிய நிறுவனங்கள் இந்த வகையான கூட்டாண்மை ஒப்பந்தங்கள் மூலம் லாஜிஸ்டிக்ஸ்,  நெட்வொர்க், இன்பிராஸ்டிரக்சர், மூலப்பொருள்கள், மனித வளம், வாடிக்கையாளருடன் இருக்கும் நற்பெயர் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வகையான ஒப்பந்தங்கள் கூட்டாளிகளுக்கு லாபத்தில் ஒரு பங்கை கொடுப்பதன் மூலமாக பரஸ்பர உறவு மேம்படும்.

ஒன்வொர்ல்ட் அலையன்ஸ் – பத்து முக்கிய விமான நிறுவனங்களுக்கிடையேயான ஒரு கூட்டு ஒப்பந்தமாகும் (பிரிட்டிஷ் ஏர்வேஸ், கேத்தே பசிபிக், ஃபின்னேர், ஐபீரியா, லேன், குவாண்டாஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், மாலேவ், ராயல் ஜோர்டானியன் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்) – தனித்தனியாக வழங்க முடியாத சேவையை வழங்க இது போன்ற கூட்டாண்மைகள் பயன்படுகின்றன. இந்த சேவை, குறைந்த கட்டண உலக சுற்றுப் பயண கட்டணமாகும், இதில் வாடிக்கையாளர்கள் உலகளாவிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக ஒரு கட்டணத்தை செலுத்துகின்றனர். ஒன்வொர்ல்ட் கூட்டணிக்குள் இருக்கும் எந்த விமானத்திலும் வாடிக்கையாளர்கள் பயணிக்க முடியும் என்பதால், இந்தத் திட்டம் வாடிக்கையாளருக்கு 135 நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் செல்ல வாய்ப்பளிக்கிறது. மிகவும் வெற்றிகரமான இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

குறிப்பிட்ட வகை பொருட்களை தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் அது போன்ற பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தத்த முறையை மேற்கொண்டு ஒரு கம்பெனி தயாரிக்காத பொருட்களையும் தயாரிக்க முடியும். இது விற்பனையை கூட்டும்.

இந்த வகை கூட்டணியில் விலை நிர்ணயத்தில் நெறி முறையற்ற அல்லது சட்டவிரோத வணிக நடைமுறைகளை தவிர்ப்பது மிகவும் அவசியம்.

கூட்டாண்மைகளை உருவாக்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூட்டாண்மை செயல்முறையை கவனமாக கட்டமைத்தல் திட்டமிடுதல் – பேச்சுவார்த்தை, தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது.

இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களில் உள்ள கூட்டுறவு ஒப்பந்தங்களில் குறிப்பிடதகுந்த சில:

 ஃப்ளிப்கார்ட்- வால்மார்ட் யு எஸ்

அமேசான் இந்தியா – பியூச்சர் ரீடெயில்

பிக் பாஸ்கெட் – அலிபாபா  

ஜியோ மார்ட் – ரிலையன்ஸ், பேஸ்புக்

இதைத் தவிர ஓட்டல்கள் ரெஸ்டாரன்ட்களிலிருந்து இருந்து உணவுகளை விநியோகம் செய்யும் சோமட்டோ, ஸ்விக்கி போன்றவற்றையும் கூட்டாண்மையாக எடுத்துக் கொள்ளலாம். ஈவன்ட் மேனேஜ்மென்ட், திரைப்பட விளம்பரங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஊடகங்களில் வெளியிடுபவர்களை மீடியா பார்ட்னர் என அழைக்கின்றனர்.

இப்படி  நமது வணிகத்திற்கேற்ற வகையில் உரிய கூட்டாளியை அடையாளம் கண்டு கொண்டு இணைத்துக்கொண்டாலோ அல்லது இணைந்துகொண்டாலோ   வணிகம் அமோக வளர்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை.

Spread the lovely business news