உலகமே  பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. அதற்கு மாற்று வழி என்ன என்று தேடிக்கொண்டிருக்கிறது. 

பாக்கு மட்டை தட்டுகள்,  வாழை மட்டை  தட்டுகள் போன்றவை புழக்கத்தில் இருந்தாலும் அவற்றில்  உணவை வைத்து மைக்ரோவேவ் அவனில்  சூடு படுத்த இயலாது. 

மைக்ரோ அவனில் வைத்து உணவை சூடு செய்வதற்க்கு ஏற்றவாரும் , அதேசமயம் அந்த தட்டுக்கள் எளிதில் மக்குவதாகவும்  இருக்க வேண்டும். கரும்பு சக்கை களிலிருந்து இதுபோன்ற உணவு பரிமாறும் தட்டுகள் போன்றவற்றைத்  தயாரிக்கலாம்,  இதை பயன்படுத்தி  விட்டு, மண்ணில்  தூக்கி எறிந்தால்  90 நாட்களுக்குள் மக்கும் தன்மை உடையதாக இருக்கிறது. இது மைக்ரோவேவ் அவனில்  20 டிகிரியிலிருந்து 140 டிகிரி  வரை சுட வைக்கும் போது தாங்கும் சக்தியுடையதாக இருக்கிறது.

முன்னர் பிளாஸ்டிக் அதிகப்படியான உபயோகத்தில் இருந்த போது, இந்த தயாரிப்புகள் யாராலும் சீண்டப்படவில்லை. தற்போது பலர் சுற்றுபுற சூழலின் நன்மை கருதி உபயோகப்படுத்த ஆரம்பித்துள்ளனர். 

கரும்புச்  சக்கையை பயன்படுத்தி  உணவு பரிமாற உதவும் டம்ளர், கப்கள், தட்டுகள், கிண்ணம் போன்ற ஒரு முறை பயன் படுத்தி  தூக்கியெறியும் பொருட்களை தயாரிக்கலாம். இதை இந்தியாவில் பல கம்பெனிகள் தயாரிக்கின்றன. 

ECOWARE, VISSAGE, CHUK போன்ற பல பிராண்டுகளில் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன.  மேலும்  பல தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கரும்பு அதிகம் கிடைப்பதால்  இதை ஒரு வாய்ப்புள்ள தொழிலாகவும் பார்க்கலாம். 

Spread the lovely business news