ஸ்டார்ட் அப் கம்பெனிகள் வந்ததிலிருந்து பல புதிய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எப்.சி.,) தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்டவை. இவை கடன்கள் வழங்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது அதிக கிளைகள் இல்லாமல் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் வசதிகளை கொண்டவை. கொரோனா போன்ற சமயங்களில் இவை  சிறிய, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும், கம்பெனிகளுக்கும் இவர்களின் கடனுதவி உதவிகரமாக இருக்கும். ஆனால் வங்கிகளை விட வட்டிகள் கூடுதல் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

இந்தியாவில் இது போன்று இருக்கும் சில கம்பெனிகளை பார்ப்போம்.

லோன்ஸ் பார் எஸ்.எம்.ஈ.,

ஸ்டார்ட் அப் கம்பெனியான லோன்ஸ் பார் எஸ்.எம்.ஈ., (loans4sme). உங்களுக்கும், கடன் கொடுக்கும் நிறுவனத்திற்கும் (பெரும்பாலும் வங்கிகள்) பாலமாக இருக்கும். உங்கள் கடன் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.

கடன் கொடுப்பவரையும், கடன் வாங்குபவரையும் இணைக்கும் பாலமாக இருப்பதுதான் லோன்ஸ் 4 எஸ்.எம்.ஈ., கம்பெனியின் முக்கியமான வேலை.

 https://loans4sme.com என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் கம்பெனியைப் பற்றிய முழு விவரத்தையும் பதிவு செய்ய  வேண்டும். உங்கள் கம்பெனியை முழுமையாக ஆராய்ந்து உங்களுக்கு  கடன் தேவைதான்  என்று அவர்கள் முடிவு செய்தால்,அவர்கள்  வங்கிகள், நிதி நிறுவனங்கள், வெஞ்சர் கேபிடல் கம்பெனிகள், பாக்டரிங் கம்பெனிகள் ஆகியவற்றுக்கு தகுந்தபடி பரிந்துரை  செய்து  கடன் கிடைக்க ஏற்பாடு செய்வார்கள்.

உங்களுக்கான கடன் கிடைக்க வழிவகை செய்து விட்டால் இந்த நிறுவனம் 1% முதல் 2%வரை  சர்வீஸ் சார்ஜ் உங்களிடமிருந்து வாங்கிக் கொள்ளும். www.loans4sme.com

இன்கிரெட்

இன்கிரெட் (incred) என்ற கம்பெனி சிறிய கடன்களை  கொடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது இந்த கம்பெனி கன்சூமர் லோன்,  வீடு கட்டும் லோன், படிப்பதற்கான லோன் போன்றவை மட்டுமின்றி, மருத்துவம் சம்பந்தமான கடன்கள் அளிப்பதிலும்  முக்கிய பங்கு வகிக்கிறது. www.incred.com

கியூப்ரா

கியூப்ரா (Qbera)   ஸ்டார்ட் அப் தொழிலில்  இருப்பவர்களுக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கும் கடன்கள் வழங்குகிறது. www.qbera.com

ஆரோக்கியா பைனான்ஸ்

ஆரோக்கியா பைனான்ஸ்,  உங்களின் மருத்துவமனை  உங்களின்   மருத்துவ செலவுகளுக்கு  கடன் வழங்க முன் வந்தால் அதற்கான பணத்தை நேரடியாக மருத்துவமனைக்கே செலுத்தி விடுகிறது. www.arogyafinance.com

Spread the lovely business news